உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

99

யொன்றினாலேயே யாவன வாயின் அவர் அறிவுஞ் செயலு மில்லாக் கல்லும் மண்ணும்போல், அறிவில் (அசேதனப்) பொருள்களாவராதலின் என்க. அதுவேயுமன்றி, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அறத்துப்பாலின் ஈற்றில் ஊழ்வலியை மிகுத்துக் கூறினாராயினும், அவ்வூழின்வலி, மக்களின் விழுமிய அறிவுமுயற்சியின் மென்று

முன்னே நில்லாதொழியு

தெருட்டிப், பின்னின்ற பொருட்பாலில்,

“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’

என்று முடித்துக் கூறதலாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் நாயனார்க்கும் உடன்பா டல்லாமை நன்கு பெறுதுமன்றோ! மலத்தினால் மறைவுண்டு கிடந்த உயிர்கள் இறைவன் திருவருளால் மாயையிற் றிரட்டப்பட்ட உடம்பினைக் கருவியாகப் பெற்று, அம்மலமாசு சிறிது நீங்கி அறிவும் முயற்சியும் உடை யனவாய் முனைந்து நிற்கும் வழி, அவை இன்பத்தை அவாவியே நிற்கும் அல்லது அறத்தினை அவாவி நில்லா என்பதூஉம், முதன்முதற் பிறவிக்குவரும் ஓரறிவுயிர்கட்குப் பழவினை சிறிதுமின்மையின் அவற்றின் முயற்சிக்குப் பழவினை காரணமாகாது இன்பமே தலைக்காரணமாய் நிற்கு மென்பதூஉம், அதனாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் சைவசித்தாந்தத்துக்குச் சிறிதும் அடாதென்பதூஉம், யாண்டும் உயிர்கள் கீழ்க்கீழ்ப் பிறவிகளிற் செய்த முயற்சிகளின் பழக்கந் துணையாக மேன்மேற் பிறவி களில் மேலுமேலும் அறிவுமுயற்சி யுடையனவாய்ச் செல்லுதலின் இன்பத்தா லுந்தப்பட்ட அறிவு முயற்சியே பிறவியி னேற்றத்திற்குக் காரணமாமென்பதூஉம், இதுவே சைவசித்தாந்தத்துக்கும் அதனை அகத்தடக்கி நூல்செய்த திருவள்ளுவனார்க்குங் கருத்தா மல்லது இதற்கு மாறாக அறத்திற்கு முதன்மை சொல்லுதலும் அதனைவிட்டுப் பழவினைக்கு முதன்மைசொல்லுதலும் அவர்க்குச் சிறிதுங் கருத்தான்றாமென்பதூஉம், அம் மறுப்புரைக்காரர் உணர கடவாராக. “சிறப்பீனுஞ் செல்வமுமீனும்” என்னுந் திருக்குறள் அறஞ்செய்தலால் வரும் பயன் உணர்த்துவதேயன்றி, இன்பத்தினும் பார்க்க அறமே சிறந்ததென் அறத்திற்கு முதன்மை சொல்லாமையின் அதனை எடுத்துக்காட்டுதலால்

க்

அம்மறுப்புரைக்காரர் கருத்து நிரம்புமாறில்லை யென்றும்

ஓர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/132&oldid=1592337" இலிருந்து மீள்விக்கப்பட்டது