உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் - 30 -

அவன்றன் புதல்வற்கு உளதாவதால், முன்னை நிலையிலும் இந்நிலையில் நிற்பார்க்கு நெருங்கிய தொடர்பும் அதுபற்றிவரும் உரிமையும் அவ்வுரிமையால் நிகழும் மிக்க அன்பும் உண்டாதலைக் காண்கின்றோம். என்றாலுந், தன் தந்தையோடு கூடிநுகரும் இன்பம் புதல்வற் கின்மையின் இஃது இரண்டாம் படிக்கண்ணே வைக்கப்பட்டது. என்றாலும், புதல்வனால் தந்தைக்கு இன்பமுந், தந்தையின் உதவியாற் புதல்வற்கின்பமும் நிகழக்காண்டலின் இவரது சேர்க்கையும் இன்பமென்னுங் பொன் நாணினாலேயே பிணைக்கப்பட்டு விளங்குகின்றதென ஓர்மின்!

னி, இதற்குமேல் மூன்றாம்படிக்கண் நிற்பது சகமார்க்கம் என்று நுவலப்படும். ஒருதலைவன்பால் அவனடியவனுக்கு அன்புடனே கூட மிக்க அச்சமும் நிகழும்; புதல்வற்கோ தன் தந்தையினிடத்து மிக்க அன்பு உண்டாயினுந், தந்தையின் ஒழுகலாறுகள் எல்லாவற்றுள்ளுந் தலையிடுதற்கு உரிமை யில்லானாய் அச்சத்தால் அவனைச் சிறிது அகன்றொழுகுங் கடமைப்பாடேயுடையன். மற்று, நெருங்கிய கெழுதகைமை வாய்ந்த தோழர் இருவர்க்குள் நிகழும் பேரன்போ அச்சம் சிறிதுமே கலக்கப் பெறாத விழுப்பம் வாய்ந்தது; ஒருவருள்ள நிகழ்ச்சிகளெல்லாம் ஒருவரறிந்து நலந்தீங் கிரண்டிலும் நழுவாத கேண்மையுடையராய் நிற்கச்செய்வது. கீழ்ச்சென்ற ஏனை இருபடிகளில் நிற்பாரினும் நெஞ்சம் ஒத்த நேயர்மாட்டு நிகழும் அன்பும் இன்பமுஞ் சாலப்பெரியவாகலின், இவரது சேர்க்கை ஏனையிருவரது சேர்க்கையினுஞ் சிறந்ததாக மூன்றாம் படிக்கண்ணே இருத்தப்பட்டது. நெஞ்சு ஒன்றாகாவழித் துன்பமும், அ வ ஒன்றாயவழிக் கழிபேரின்பமும் விளைதலால், தோழர்தம் சேர்க்கையும் இன்பத்தையே நிலைக்களனாய்க் கொண்டு நிற்றல் எளிதிற் புலனாம்.

இனி, இதற்குமேல் நாலாம்படிக்கண் இறுதியாய் நிற்பது சன்மார்க்கம் என்று உயர்த்துச் சொல்லப்படுவதாகும். இஃது ஒருதலைவன்பால் அவனோடு உயிரும் உடம்பும் ஒன்றான அவன்றன் காதலிக்கு உளதாகுங் காதலன் பின் சேர்க்கையே யாகும். இதற்குக் கீழ்ப்படியில் நின்ற தோழரது சேர்க்கை மிகச் சிறந்ததேயாயினும், அஃது அவர்தம் உள்ளத்தளவாய் நிற்பதே யன்றி, அவர் தம் உடம்பையும் பற்றி நிற்பதன்று. மற்றுக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/135&oldid=1592348" இலிருந்து மீள்விக்கப்பட்டது