உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

113

சகுந்தலையுந் தாமாகவே காதலித்து மணந்து கொண்ட வரலாற்றினை அறிந்திலிரோ!" என்றும், “விழுமியோனான நளனை எழில் மிகும் அரசியான தமயந்தி பெரிதுங் காதலித்துத் தானாகவே மாலைசூட்டி அவனை மணந்து கொண்ட வரலாற்றினை உணர்ந்திலிரோ!” என்றும், “கற்பரசியாகிய சாவித்திரி சத்தியவானைக் கானகத்தே கண்டு அவன்மேற் கழிபெருங் காதல் கொண்டு அவனை மணந்த வரலாற்றினைத் தெரியீரோ! என்றும் அவர் கடாவி இவரது சாதிச் செருக்கினை எளிதிலே களைந்தொழிப்பர். இம்மேலோர்களை யெல்லாஞ் சிறிதும் வாய்கூசாது வேசிமக்களென்னும் வகுப்பிற் சேர்த்துரைத்த மறுப்புரைகாரர் புல்லுரையினை மேற்காட்டிய விழுமிய காதன் மண வரலாறுகள் வாளாய் நின்று ஈருமல்லவோ! அதுநிற்க.

இனி, அம்மறுப்புரைகாரர் இஞ்ஞான்று காதன் மணம் புரிவாரையும் வேசிமக்களென்ற வகுப்பிற் சேர்த்துக் கூறிய தமது தலைகொழுத்த உரையினை, இஞ்ஞான்று கல்வியறிவு ஒழுக்கங்களானும் உயர்ந்த பதவிகளானும் மேல்நிலைக் கண்ணின்று காதன்மணம் புரிந்து வரும் மேன் மக்கள் பாற் சென்று உரைப்பராயின், அவர்,

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்”

என்னுந் தெய்வத் திருக்குறளின்படி, நலமில்லாப் பொய்யுரை பகர்ந்து எம்மை இழித்துப் பேசும் நீரே நும்பிறப்பின் கண் ஐயப்படுதற் குரியீரன்றி யாமல்மே" என அவர் என அவர் இவரது உரைக்கொழுப்பினை யுருகச் செய்வ ரன்றோ!

இனி, ஆசிரியர் சேக்கிழார் உயர்ந்த வகுப்பார்பாற் காதன்மணம் நிகழ்ந்ததெனக் கூறிற்றில ரென்றார், உயர்ந்த ஆதி சைவ அந்தண வகுப்பில் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பரவை நாச்சியார்க்கும் வேளாள வகுப்பிற் பிறந்த சங்கலிநாச்சியார்க்கும் காதன் மணம் நிகழ்ந்த தனை ஆசிரியர் சேக்கிழார் தாம் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண முற் பிற்பகுதிகளில் நன்கெடுத்து உரையாநிறக், அவர் அதனை உரைத்திலரென்ற அம்மறுப்புரைகாரர் பொய்யுரைக்கு அறக்கடவுளும் அஞ்சுமென்க.

தங்

காடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/146&oldid=1592391" இலிருந்து மீள்விக்கப்பட்டது