உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

112

மறைமலையம் - 30

மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின். 'என்று உரையுங் கூறினார். கூறவே, பண்டைத் தமிழ்மக்கள் மட்டுமே யன்றி ஆரியமக்களுள்ளும் இளைய ஆடவரும் மகளிருந் தம்மில் ஒருவரை யொருவர் காதலித்தே மணங் கூடினாரென்னும் உண்மை இனிது விளங்கா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் வழிவந்த பண்டைத் தமிழ்ச்சான்றோரில் திருவள்ளுவர், நக்கீரர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்திகள் முதலான எல்லாத் தெய்வ ஆசிரியர்களுங் காதன்மணத்தை விதந்தெடுத்து அருளிச் செய்திருக்க, காதன்மணம் பண்டைக் காலத் துயர்ந்தோரில் நடக்கவில்லையென்று படுபொய் யுரைத்ததோடு அமையாது, அங்ஙனங் காதன்மணஞ் செய்த பண்டையுயர்ந்தோரையும், அம்மணத்தினை விதந் தெடுத்து நூல்யாத்த தெய்வ ஆசிரியரையுமெல்லாம் வேசி மக்கள் வகுப்பின்பாற் படுத்த அம்மறுப்புரைகாரர் அத் தமிழ் மேன் மக்கள் மரபில்வந்த ஒருத்தி வயிற்றிற் பிறந்தவரோ அல்லரோ அறிகிலம். ஒருகால் அவர் தம்மை ஆரிய வகுப்பின்கண் ஒருத்திபாற் பிறந்தவராகக் கருதியிருக்கலாமெனில், ஆரிய வேதமுங் காதன்மணத்தையே விழுமிதெனக் கொண்டு மொழிதலின், ஆரிய வேதநூ லாசிரியரும் அவர்காலத்து ஆரிய மக்களும் எல்லாங் காதன் மணஞ் செய்தே வாழ்ந்தமை புலனாம்; அவ்வாறு காதன் மணஞ்செய்த ஆரியரும் அம்ம மறுப்புரைக்காரர் கூற்றின்படி வேசிமக்களேயாய் முடிதலின், அவர் ஆரியப்பெண் ஒருத்தி வயிற்றிலும் பிறந்தவரல்லர் போலும்! இப்பரதநாட்டின்கட் பண்டுதொட்டு வாழ்ந்துவருந் தமிழர் ஆரியரெல்லாரும் வேசிமக்களாக இவரதுரையாற் பெறப்படுதலின், இவர் இவ்விருவேறு இனத்தவரல்லாத வயிற்றிற் பிறந்தாரென்பதை அதனை ஆராயவிரும்புவாரே நிலையிடற்

பாலார். அதுகிடக்க.

வேறெவ்வினத்தவள்

னிப்,பண்டைநாளின் கணிருந்த உயர்ந்த மக்கள் எவருங் காதன் மணஞ் செய்யவில்லை என்று படுபொய் மொழிந்த அம் மறுப்புரைகாரர், அப்பொய்யுரையைப் பள்ளிக்கூடத்துச் சிறுவர் பாற் சென்று உரைப்பராயின், அவர் உடனே இவர்தம் பொய்யுரையின் புன்மையினை நன்கெடுத்துக்காட்டி, இவர் இறுமாப்பினை அடக்கிவிடுவர். ஏனெனின், “உயர்குலத்தவ னாகிய துஷ்யந்தமன்னனுங் கண்ணுவமுனிவர் வளர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/145&oldid=1592387" இலிருந்து மீள்விக்கப்பட்டது