உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

14. காரைக்காலம்மையார் மனைவாழ்க்கை

னிக், காரைக்காலம்மையார் தங்காதற்கருத்தறிந்து, அவர்தஞ் சுற்றத்தார் அவர்க்கேற்ற மணமகனைத் தெரிந் தெடுத்து, மணஞ்செய்வியாது, தமது சாதிக்கட்டுப்பாட்டிற் பிணிப்புண்டு, அவர்க்கு ஏலாத ஒருவனைக் கணவனாகப் பொருத்தினமையால் அவரது வாழ்க்கை காதலன் பின்பாற் பட்டு ஒருவழிச் செல்லாதாயிற்று என யாம் மொழிந்ததனை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைக்காரர், மகளிர்தாமே கணவனைத் தெரிந்து கொள்ளும் முறை, வேசிகளிடத்தும் அவரையொத்த வகுப்பாரிடத்துமின்றி, ஏனையுயர்ந்த சாதியாரிடத்துப் பண்டும் ன்றும் நிகழவில்லை யென்கின்றார்.

ஆசிரியர் தொல்காப்பியனார், ஆரியர் நாட்டு எண்வகை மணங்களுட் சிறந்த காந்தர்வமணத்தோடு ஒப்பதான காதன் மணமே பண்டைத் தமிழ்மக்களுள் நடைபெற்ற விழுப்ப முடையதெனக் கொண்டு, அதனையே சிறந்தெடுத்து,

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்

காமக் கூட்டங் காணுங் காலை

மறையோர்தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே”

(களவியல்

1)

என்றருளிச் செய்தனர். செய்தனர். இச்சூத்திரத்திற்கு இச்சூத்திரத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும் இவ்விழுமிய மணமே வேதத்திற்கும் உடம்பாடென்பது காட்டுவாராய், “வழக்கு நாடி” என்றலின்

ஃதுலகிய லெனப்படும்; உலகத்துமன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/144&oldid=1592383" இலிருந்து மீள்விக்கப்பட்டது