உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் - 30 : -30

தெளியான்” என்று கூறுமாற்றானும், அவன் அம்மையாரின் உண்மை நிலையை உணர்ந்தவனவல்ல னன்பதூஉம் அவனுள்ளமும் அவர்உள்ளமும் ஒருவழியே ஒன்று பட்டு நின்றன அல்ல என்பதூஉம், அதனால் அவன் அவர்க்கேற்ற கணவனல்ல னென்பதூஉம் இனிது விளங்குகின்ற அல்லவோ? அதன்பின்னர், அம்மையார் கூறிய உண்மையை ஆராய்வான் வேண்டி மற்றுமொரு மாங்கனி அவன் வருவித்துத் தருமாறு வேண்டியபடியே அவர் இறைவன்பாற் பெற்ற மற்றுமொரு கனியையுங் கொணர்ந்து அவன் கையிற்கொடுக்க, அஃது உடனே மறைந்து போயிற்று. அங்ஙனம் மறைந்ததைக் கண்ட பின்னும் அவன் அம்மையாரின் தெய்வமாட்சியினையும் அவர்க்குச் சிவபிரான் அருள்செய்த மாட்சியினையும் உணர்ந்து காணமாட்டானாய் அவர்பால் மேலும் மேலும் பேரன்பு கொள்ளமாட்டானாய், அவரை ஒரு தெய்வமாகவே கருதி அஞ்சி அவரை அணுகாதிருந்து, பின்னர் அவர்க்குத் தெரிவியாமலே அவரை விட்டு அகன்று வேறோரூர்க்குப் போய் வேறொரு மாதினை மணந்து கொண்டான் இவை தம்மை ஆசிரியர் சேக்கிழாரே,

66

வணிகனுந் தன்கைப் புக்க மாங்கனி

பின்னைக் காணான்

தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந்

தடுமா றெய்தி

அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக்

கருதி நீங்கும்

துணிவு கொண்டு எவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்’

எனவும்,

“விடுவதே எண்ணமாக மேவிய முயற்சி செய்வான்

எனவும்,

சலந்தரு கடவுட் போற்றித் தலைமையாம் நாய்கன் றானும் நலந்தரு நாளி லேறி நளிர்திரைக் கடன்மேற் போனான்

எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/149&oldid=1592404" இலிருந்து மீள்விக்கப்பட்டது