உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

66

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் ‘கடன்மிசை வங்கமோட்டிக் கருதிய தேயந்தன்னில் அடைவுறச் சென்று சேர்ந்து”

எனவும்,

மெய்ப்புகழ் விளங்கு மவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற

செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்

வி

117

எனவும் உரைத்தல் காண்க. மேலெடுத்துக் காட்டிய மூன்றாஞ் செய்யுளில் அவன் அம்மையாரை விட்டுக் கடன்மேற்சென்ற காலையில் வருணனை வணங்கிச் சென்றான் என்று சேக்கிழார் கூறியிருத்தல்கொண்டு, அவன் சிவபிரானை வணங்குதலிலுங் கருத்து ஒருப்படுதல் இலன் என்பது நன்கு புலனாகின்றது அவன் உண்மையிற் சிவபிராற்கு அடியவனாயிருந்தால் அங்ஙனங் கடற்சிறு தெய்வத்தை வணங்கானன்றோ? மேலும், அவன் சிவபிரானிடத்தாவது சிவபிரானடியவரிடத்தாவது தினைத்தனை யன்புதானும் உடையனென்பது ஆசிரியரால் எங்கேனுங் குறிக்கப்பட்டடுளதா? சிறிதுமில்லையே. இங்ஙன மெல்லாம் ஆசிரியர் சேக்கிழார் கூறியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளைப் பல படியானும் ஆய்ந்து பார்க்கும் வழிக், காரைக்காலம்மையார்க்குத் தக்க கணவன் அவனல்லனென்பது சிறு மகார்க்கும் எளிதின் விளங்காநிற்கும். இவையெல்லாம் ஒரு சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத அம்மறுப்புரைகாரர் ஏதொரு சான்றுங்காட்டாது, அவன் அவருக்குத் தக்க கணவனே என அழிவழக்குப் பேசியது கண்டு அறிவுடையார் அவர் கூற்றை எள்ளி நகையாடி விடுப்பதன்றி வேறு என் செயற்பாலார்!

6

இனித், தன்னை வணங்குதற்குரிய மனையாளாகிய அம்மையாரைக் கணவனாகிய தான் வணங்கியது அவரிடத்துக் கண்ட தெய்வத்தன்மை பற்றியேயாதலின், அது கொண்டு அவனை அவர்க்குத் தக்கானல்லன் என்றல் அமையாது என அம்மறுப்புரைகாரர் எமது மேற்கோளை மறுத்தார். தெய்வத் தன்மை கண்டபின் அவன் அவரை அன்பினால் வணங்கினனா அச்சத்தால் வணங்கினனா என்று ஆராய்ந்து பார்த்தனராயின், அங்ஙனம் போலி மறுப்பு எழுத முன்வந்திரார். அவன் வணங்கியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/150&oldid=1592407" இலிருந்து மீள்விக்கப்பட்டது