உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

-30

மறைமலையம் - 30 ×

அன்பினால் நிகழ்ந்ததாயின் அத்தகைய அன்பு அவன்பால் முன்னரே தோன்றியிருத்தல்வேண்டும். முன்னரே அன்பினாற் பற்றப்பட்டிருந்தானாயின், அவ்வன்பின் பெருக்கால் அவர்தந் திருத்தொண்டின் அரிய மாட்சியினை உணர்ந்திருந்தனனாயின், அம்மையாரை ஓரிமைப்பொழுதாயினும் பிரிந்திருக்க உளம் ஒருப்படுவனோ? அவரோடு ஒருங்கிருந்து அவர் செய்து போதருஞ் சிவநேயத் திருத்தொண்டிற்குத் தானுமுதவியாய் உடனிருந்து அதனைச் சிறக்கச் செய்து தானும் மகிழ்ந்து அவரையும் பெரிது மகிழ்விப்பனன்றோ? அன்புடையார் செயல் இதுவாயிருக்க, அவனோ அவ்வன்புக்கு மாறாய் அம்மையாரைக் காளியோ, கூளியோ, பேயோ, பூதமோ எனப் பிழையாக நினைந்து உள நடுநடுங்கி அவரைவிட்டு அவர் அறியாமே அகன்று, சேய்மைக் கண்ணதான பிறிதொரு நாட்டிற் சென்று குடியேறினான் என்பதனால் அவன் அம்மையாரின் உண்மைநிலை தெரிந்து அவர்பால் அன்பு பூண்டு ஒழுகினவன் அல்லனென்பதூஉம், அம்மையாரை அவர்தஞ் சுற்றத்தார் வலியக் கொண்டு போய் அவன்பாற் சேர்ப்பித்த ஞான்றும் அவன் தன்இரண்டாம் மனைவிமக்களோடு எதிர் போந்து, அவரை வணங்கியது. அவர் தனக்குந் தன்குடும்பத்தார்கும் ஏதேனுந் தீங்கு இழைத்து விடுவாரோ என்னும் அச்சத்தாலன்றி அன்பினாற் செய்ததன்றாதலின், அவன் அவரை வணங்கிய வணக்கம் அவர்க்குத் தக்கான் ஒருவனாற் செய்யப்பட்டதாகாதென்பதூஉம் இனிது

பெறக்கிடந்தமை காண்க. ஆகவே, அம்மறுப்புரைகாரர் அவன் உளப்பான்மையினைப் பகுத்துணர்ந்து பாராது, அவனை அவர்க்குத் தக்கானென்றது பொருத்தமில் போலியுரை யாமென்க.

இனிச், சுந்தரமூர்த்தி நாயனார்க்கு அவர்தஞ் சுற்றத்தார் கூட்டிவைத்த மணத்தை இறைவன் தடுத்தருளியவாறுபோல, அம்மையார்க்கு நிகழ்ந்த திருமணத்தையும் அவன் தடுத்திலாமை அவர்பால் அவற்கு அருளிரக்கம் இன்மையாற் போலும்! என்று அம்மறுப்புரைகாரர் மற்றொன்று சொல்லிக் குறிப்பால் எம்மை ஏளனஞ் செய்திட்டார். இறைவன் அடியார்க்கு அருள் செய்யும் முறைகள் பல பெற்றியவாய் நம்மனோர்க்கு முரண்பாடுடையபோற் காணப்படும். அவற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/151&oldid=1592411" இலிருந்து மீள்விக்கப்பட்டது