உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

119

கெல்லாங் காரணங்க ளென்னையென இறைவனையே கேட்டல் வேண்டுமன்றி, ஏனைமக்களைக்கேட்டால் அவை ஒரு சிறிதும் புலனாகா. மாணிக்கவாசகர் கொணர்ந்த பாண்டியன் பொருளையெல்லாங் கவர்ந்து நரிகளைப் பரிகளாகவும் பரிசுகளை நரிகளாகவும் மாறச்செய்து அருள் செய்ததும், திருஞானசம்பதர்க்கே திருமுலைப்பால் ஊட்டி அருள் செய்தததும், இயற்பகைநாயனார் மனைவியை அவர்பாற் பெற்றுச்சென்று அருள் செய்ததும், மெய்ப்பொருள் நாயனாரை அவர்க்குப் அவர்க்குப் பகைவனாயினான் கையினாற் கொலைசெய்வித்து அருள்செய்ததும், சிறுத்தொண்ட நாயனார் பிள்ளையை அறுத்துக் கறிசமைக்கச் செய்து அருளியதும், குங்குலியக்கலையார்க்குக் கடைசியில் ஏராளமான செல்வத்தைக் கொடுத்து அருள் செய்ததும், இளையான்குடிமாறரை வாழ்நாண் முற்றும் வறுமையிலேயே

வத்து அருள்செய்ததும், இன்னும் இவைபோல ஒன்றினொன்று மாறான அருள் நிகழ்ச்சிகளை றைவன் செய்ததும் என்னை? யென்று அவற்றுக்கெல்லாம் இறைவன் திருவுளக்கருத்தினை ஆராயப்புகுந்தால், அது நம்மனோர்க்கு விளங்கற்பாலதன்று. ஆதலால், இதனையோர் ஏதுவாய்க் கொண்டு அம்மறுப்புரைகாரர் எம்மை ஏளனஞ் செய்யப்புக்கது அவர்க்கே ஏளனமாய் முடிந்தமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/152&oldid=1592415" இலிருந்து மீள்விக்கப்பட்டது