உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

15. சுந்தரமூர்த்திகளின் காதற் திருமணம்

னிச், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை சங்கிலியாரை மணந்ததற்குக் காரணம், அவர் தமது முற்பிறவியிற் றிருக்கைலையி லிருந்தஞான்று செய்த குற்றமேயாகுமென அம்மறுப்புரைகாரர், பிற்காலத்தே பொய்யாகப் புனைந்து கட்டிப் பெரிய புராணத்தே பார்ப்பனர் சேர்த்துவிட்ட ஒரு கதையினை எடுத்துக்காட்டுகின்றார்.வேறு தக்க காரணங் காட்டலியலாது ஒரு பொய்க்கதையினைத் தமக்குத் துணையாகக் கொண்ட இவரது செயல், நீரிலமிழ்வோன் ருவன் பெரிதுந் தத்தளித்துச் சிறியதொரு துரும்பினைத் தனக்குத் துணையாக விரைந்துபற்றிய தனையே ஒப்பதாயிருக்கின்றது! இவர் தமது சாதியிறுமாப்புக் கொள்கைக்கு இத்தகைய பொய்க்காரணமன்றி, வேறெது காட்டவல்லார்! அது நிற்க.

இவரெடுத்துக் காட்டிய பொய்க்கதையினைக் கூறுந் 'திருமலைச்சருக்கம்’ ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப் படாமற் பிற்காலத்துப் பார்ப்பனரொருவாற் புனைந்து கட்டிப் பெரிய புராணத்தின்கட் சேர்க்கப்பட்டதாகும் என்னும் உண்மையினை எமது ஞானசாகரப் பத்துப் பதினோராம் பதும இதழ்களின் புல்லிமேல் வெளிவந்த சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் ஆராய்ச்சியுரையில் விரித்து விளக்கி யிருக்கின்றாம். அவ்வளவும் ஈண்டெழுதுதல் வேண்டாமையிற் சில குறிப்புகள் மட்டுமே காட்டுவாம்:

திருக்கைலையிலிருந்த ஆலாலசுந்தரர் இறைவற்குப் பூக்கொய்வான் வேண்டி ஆண்டுள்ள பூங்காவிற் புக்கவழி, அங்கு முன்னரே இறைவிக்கு மலர்வேண்டி வந்திருந்த கமலினி, அனிந்திதை என்னும் நங்கையரைக் கண்டு காமுற்றுக் குற்றஞ் செய்தனரென்றார். இதனைக் கூறுகின்றுழிச், சிவபிரான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/153&oldid=1592419" இலிருந்து மீள்விக்கப்பட்டது