உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 30

என்று

வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம்

இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்"

வலியுறுத்து

நுவலுகையில்,

மணங்கூடாத

ஆலாலசுந்தரரும் அங்ஙனமே மணங்கூடாக் கன்னியரான அவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்தது குற்றமாமோ? அவா வறுத்த உயிர்கள் சென்று வைகுதற்கிடமான வீட்டுலகு திருக்கைலாய மாகலின், ஆண்டுள்ளார் ஒருவரையொருவர் அவாவுதல் குற்றமன்றோவெனின்; அவாவறுத்து வீட்டுலகு சேர்ந்தார்க்கும் ஆண்டு மீள அவா வுண்டாமென்றல் யாங்ஙனம் கூடும்? மேலுங், காதலின்ப நுகர்ந்து அவ்வாற்றால் அவாவறுத்தற்பொருட்டாக இறைவன் சேர்த்துவைத்த ஆண்பெண் சேர்க்கை, காதலின்பம் நுகர்ந்தொழித்து அவர் அவிந்து இறைவன் திருவடியைத் தலைக்கூடினார்க்கும் மீண்டும் உளதாவதாயின், இறைவனைச் சேர்ந்து பெற்றபயன் என்னை? என்று இவ்வாறெல்லாம் நிகழுந் தடைகளால் திருக்கைலையிற் சுந்தரர் காதலித்த கதை வெறும் பொய்யாதல் நன்கு பெறப்படும் என்க.

அதுவேயுமன்றி,இம்மண்ணுலகத்துள்ளார் தஞ்சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத நுண்பெரு மேல்நிலைக்கண்ணதான அராகதத்துவ வுலகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அக்கதையினை, இம்மண்ணுலகத்திருந்த சேக்கிழார் அறிந்ததெவ்வாறு? இந் நிலவுலகத்து நிகழ்ந்த நாயன்மார் வரலாறுகளைச் சேக்கிழார் நன்காராய்ந்து கண்டு உரைத் தாரன்றி, இதற்கு எட்டாத் தொலைவில் உள்ள மேலுலகங் களில் நிகழ்ச்சிகளையும் யாண்டேனுங் கூறப்புகுந்தாரல்லர்; நாயன்மார் முற்பிறவி வரலாறுகளையேனும் யாண்டாயினுங் குறிப்பாலேனுங் கூறினரோவெனிற் சிறிதுங் கூறிற்றிலர். அப்பர், சம்பந்தர், கண்ணப்பர், சிறுத்தொண்டர் முதலான எவர்க்கும் முற்பிறவி வரலாறுகள் சொல்லாத சேக்கிழார் சுந்தரர்க்கு மட்டும் அது கூறினாறென்றல் ஒக்குமோ? சம்பந்தரைச் சுப்பிரமணியரவதாரம் என்றுங், கண்ணப்பரை அருச்சுன னவதாரம் என்றுஞ் சிறுத்தொண்டரைக் கர்ணன் அவதாரம் என்றும் வழங்கும் பொய்க்கதைகளைச் சேக்கிழார் சிறிதேனுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/155&oldid=1592428" இலிருந்து மீள்விக்கப்பட்டது