உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் - 30

கிற்குப் போந்தவராக நுவலப்படுஞ் சுந்தரரன்றோ அந் நிகழ்ச்சிகளை நினைந்து மொழியற்பாலார்? சுந்தரமூர்த்தி நாயானார் இறைவனை நேரே காணும் பெருந்தவமுடையராய், இறைவனருளாற் செயற்கரும் புதுமைகள் பல செய்த பெரியாராகலின், அவர் தம்முடைய முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்தவராகவே யிருப்பரன்றி, அவற்றை மறந்தவராக இரார். அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களில் அவர்தம் வரலாற்றுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன; ஆனால், திருக்கைலையில் அவர் மாதரைக் காமுற்று அதன் பயனாக மண்ணுலகிற் பிறந்தனரெனக் கூறும் அக் கதைக் குறிப்போ ஓரெட்டுணை யாயினும் அத்திருப்பதிகங்களிற் காணப்படுகின்றிலது.

ஒறுக்கப்படுவரென்பதனை

இனி, அவர் அம்மாதரைக் காதலித்தது திருவருட் செயலென்றும், எத்துணைப் பெரியாரும் பிழைசெய்யின் இறைவன் உலகத்தார்க்கு அறிவிப்பவே அவரை இம் மண்ணின்மேற் பிறப்பித்து ஒறுத்தனன் என்றும் அம்மறுப்புரைகாரர் கரைந்தார். இவர் தம் சைவநூலுணர்ச்சியின் திறனை என்னென்பேம்! தன்னை யணுகித் தூயராய் நிற்கும் ஒருவரைத் தூயவல்லாதன செய்யுமாறு தானே ஏவிப், பின் தானே அவரை ஒறுப்பதுதானா இறைவன் அருட்செயல்! தூயராயினாரையும் பிழைபடுத்துவதே இறைவன்றன் அருட்செயலாயின், தூயராகி இறைவனைச் சார்தலாற் பயயென்னை? 'சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்' என்று சைவசித்தாந்த நூல் ஓதுதலின், அதற்கு மாறாகத் தன்னைச்சார்ந்த சுந்தரரைப் பிழையிற் படுப்பித்து ஒறுத்தவன் சைவசித்தாந்தக் கடவுளான சிவபிரான் ஆவனோ? மற்றுத், தூய்தாய் நின்ற நிலையிழந்து மாயையில் அகப்பட்டுப் பிரமமே சீவனாயிற்று எனப் புகலும் மாயாவாதப் பற்றுடைய அம் மறுப்புரைகாரரை யொத்தார்க்கே அக் கதை மெய்யாகக் காணப்படுமன்றிப், பிழைபடுமாறு உயிரை ஏவுவது ஆணவமலம், அம் மலத்தின் சேர்க்கையினின்றும் உயிரை யெடுப்பித்துப் பின்னர் அது பிழைபடாவாறு தன் திருவருட் பெருக்கிற படிவித்துப் பெயராய் பேரின்பம் நுகர்விப்பது சிவம் என்னுஞ் சைவசித்தாந்த உணர்ச்சியுடைய எம்மனோர்க்கு அக்கதை ஒரு சிறிதும் மெய்ம்மையுடைய தாகக் காணப்படா தென்றொழிக. மேலும், தூயராய்த் தன்னடி சேர்ந்தாரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/161&oldid=1592452" இலிருந்து மீள்விக்கப்பட்டது