உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

16. நாயன்மாருஞ் சாதிவேற்றுமைச் சிதைவும்

இனி, அன்பினால் அளவளாவும்

பெரியார்

சாதிவேற்றுமையினைக் கைக்கொள்ளாமையும், இறுமாப்பும் அறியாமையும் உடைய இழிந்த மக்களே அதனை விடாப் பிடியாய்க் கைக்கொண்டு பலவாற்றால் அல்லலுழத்தலும் யாம் எமது தலைமைப் பேருரையில் நன்கு விளக்கி, வேளாளராகிய அப்பரும் பார்ப்பனராகிய அப்பூதிகளும் சாதிவேற்றுமை யினைச் சிறிதும் நினையாது ஒருங்கு அளவயளாவிய உண்மை நிகழ்ச்சியினையும் எடுத்துக் காட்டினேம். மற்றுச், சாதி வேற்றுமையானது அறிவுடையாராலும் அன்பராலுங் கைக்கொள்ளப்பட்ட சிறந்த முறையாகும் என நாட்டப் புகுந்த

அம்மறுப்புரைகாரரோ, அவ்வாறு செய்தற்கு எந்த அறிவுநூலிலும் ஆன்றோர் நடையிலுஞ் சான்று காணாமையிற் பெரிதும் இடர்ப்பட்டுத், தாமும் ஒரு மறுப்பெழுதி விட்டதாகத் தம்மை யொத்தர் குழுவிற் சொல்லித் தமக்கு ஒரு பொய்ப்பெருமை தேடிக்கொள்ளுதலையே குறியாய்க் கொண்டு, அப்பரும் அப்பூதிகளும் அளவளாவிய நிகழ்ச்சிக்கு ஒரு போக்குக் காட்டத் தலைப்பட்டார். அப்பரை அப்பூதியடிகள் குருவாய்க்கொண்டன ராகலின், அவர் ஏவியபடியே அப்பூதி அவரோடு உட னிருந்து உணவு காண்ட னர். அவரை அவர் அங்ஙனங் குருவாய்க் கொள்ளாராயின், அப்பர் அவரை அங்ஙனம் ஏவுதலுந் தம்மைக் குருவாகக் கொள்ளுமாறு அவரை வலுகட்டாயஞ் செய்தலும் இழிபிறப்பாளராகிய அவர்க்குத் தகாஎன்றும் அம் மறுப்புரைகாரர் கூவினார்.

இவர் கூவிய இப்பொருளில் மொழியாற், சாதி

வேற்றுமையானது அறிஞர்க்கு உடம்பாடுதா னென்பது சிறிதாயினும் பெறப்படுகின்றதா என்பதை ஆன்றோர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/163&oldid=1592460" இலிருந்து மீள்விக்கப்பட்டது