உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

131

ஆய்ந்து பார்க்கப்படவர். அறிஞரால் அன்பராற் சாதிவேற்றுமை கருதப்படவில்லை யென்பதற்கு, அப்பர் அப்பூதிகளின் அளவளாவுதலை யாம் எடுத்துக்காட்டினேமாக, அதனை மறுப்பான் புகுந்தவர், சாதிவேற்றுமையினையே பெரிது பாராட்டி, அறிஞர்கள் தம்முள் அளவளாவுதலை யொழிந்தார் என்றன்றோ நாட்டுதல் வேண்டும்; அதனை விடுத்து எடுத்த பொருளுக்கு இயைபில்லாதவைகளை யெழுதி ஏமாற்றப் பார்ப்பது முறையாகுமா? வழக்குமுறை இன்னதென்றே யறியமாட்டாத இவர், தம்மைத் தருக்க முணர்ந்தாராகக் காட்டு தற்பொருட்டுத் தருக்க நூற் சொற்களையுங் குறியீடுகளையும் எடுத்தாளுதல், அந்நூலுணர்ச்சியில்லாரை மருட்டுதற்

பொருட்டேயன்றி வேறென்னை? அதுகிடக்க. இவர் கூறியது கொண்டே சாதிவேற்றுமை ஆன்றோர் தமக்கு உடம் பாடாகாமை காட்டுதும். இவர் கூற்றின்படி அப்பராகிய வேளாளர் இழிகுலத்தினர்; அப்பூதியடிகளாகிய பார்ப்பனரோ உயர்குலத்தினர். அப்பூதியார் தம் சாதி வரம்பு கடந்து, தம்மிற்றாழ்ந்த அப்பரைக் குருவாகக் கொள்ளலாமோ? அவர் தம்மை அங்ஙனங் கொண்டாலும், இழிகுலத்தவராகிய அப்பர் தாம் அவரைத் தமக்கு மாணாக்கராக ஏற்றுக்கொள்ளலாமோ? அன்றி ஏற்றுக் ஏற்றுக்கொண்டாலுந் தம்மோடு உடனிருந்து உண்ணுகவென்று அவரை ஏவலாமோ? அவர் தாம் ஏவினாலும், உயர்குலத்தவராகிய அப்பூதி அதற்கு இசையலாமோ? அன்பிலும் அறிவிலும் நற்குண நற்செய்கை களிலும் பார்க்கச் சாதியே யுயர்ந்ததென்று கூவித் திரியும் அம் மறுப்புரைகாரர் கொள்கை உண்மையாயின், அக்கொள்கை

யினை ஆன்றோராயினார் கைக்கொண்டொழுகியது மெய்ம்மையாயின், அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கு அளவளாவியது அவர் தமக்கே குற்றமாதலோடு உலகத்தார்க்கும் ஆகாததொன்றாய் முடிக்கப்படுதல் வேண்டுமன்றோ? மற்று, அவ்விருவர்தஞ் சேர்க்கையோ அங்ஙனங் குற்றமாவதொன்றாய் ஆகாமல் அவர்க்கு நன்றாயினாற் போல, உலகத்தார்க்கும் நன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, பிறப்பளவிற் கொள்ளுஞ் சாதியுயர்வு இழிவுகள், அன்பும் அறிவும் நற்குண நற்செய்கையும் இல்லாமற் சோற்றுப் பேச்சும் வீணான கொள்ளல்கொடுத்தற் பேச்சுமே பேசிப் பிறவியைப் பாழ்படுத்திச் செருக்காநின்ற

இழிந்த

மக்கட்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/164&oldid=1592463" இலிருந்து மீள்விக்கப்பட்டது