உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

-

மறைமலையம் - 30

யுரியவாகுமல்லால், அறிவு அன்பு உயர்குணவொழுக்கங்களாற் சிறந்தார்க்குச் சிறிதும் உரிய வாகாவென்பது வைரத்தூண் போல் நாட்டப்படுகின்றமை காண்க.

இனிப், பரவையார் சங்கிலியார் என்னுஞ் சிவநேய மாதரார் அறிஞரென்ற வகையிலும், ஏனை மாதர்க்கெல்லாந் திலகமாய் நிற்கும் வகையிலும் ‘நல்லார்” என்று பெயர் பெறுதற்கு உரிமையுடையராதல் கண்டு, 'நல்லாரிணக்கம்’ எனப் பட்டினத்தடிகள் மொழிந்தாங்கு, அவர் தம் இணக்கஞ் சுந்தரமூர்த்திகட்கு மிக விழுமிய தொன்றாதலை எடுத்து விளக்கினேம். இதனை மறுப்பாண்புக்க அம்மறுப்புரைகாரர், பரவை சங்கிலியார் அடியார் கூட்டத்துள் வைத்து யாண்டுஞ் சால்லப்படாமையின் அவரை நல்லார் என்றுரைத்தல் ஆகாது; மற்று அச் சொல்லுக்கு மாதர் எனப் பொருள் கோடலே பொருத்தமாம். மாதரார் சேர்க்கை நிலையில்லாதது என்று பட்டினத்தடிகள் அச்செய்யுளிலேயே மொழியக் காண்டலால், நல்லார் என்பதற்குப் பரவை சங்கிலியாராம் மாதரைப் பொருளாகக் கூறுதல் வாயாதெனக் கிளந்தார்.

இவர் கூறம் இச்சொற்களால் மாதர்க்கு அடியராம் உரிமை இல்லை யென்பதே இவர்தங் கருத்தாகின்றது. ஆணவ மலத்துள் அழுந்தி அறிவும் இன்பமுமின்றிக்கிடந்த உயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் வருவித்து, அவை தம்மைத் தன் திருவரு ளின்பத்திற் றோய்வித்தற் பொருட்டாகவே எல்லாம்வல்ல இறைவன் ஆண் பெண்ணுடம்புகளை யமைத்து, அவை தம்முள் உயிர்களைப் புகுத்தி, அவ்வாற்றால் அவை அறிவும் இன்பமும் பெற்று ஆணவக்கட்டு நீங்கித் தன்னைச் சாருமாறு செய்விக்கின்றன னென்பதும், அவ்வாறு ஆண்டவ னால் வகுக்கப்பட்ட ஆண்பெண் பிறவிகள் இரண்டுஞ் சிறந்தனவாகுமேயல்லாமல் அவற்றுள் ஆண் உயர்ந்தது பெண் தாழ்ந்தது எனப் பௌத்தர் சமணர் மாயாவாத வேதாந்திகள் சொல்லுமுறை பொருத்தமில்லா வழுக்குரையேயாமென்பதும் சைவ சித்தாந்த அருட்செல்வர்களின் கோட்பாடாகும்; இது, “சத்தியுஞ் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்

66

ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியு மாக

வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம் இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/165&oldid=1592468" இலிருந்து மீள்விக்கப்பட்டது