உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

133

என்னுஞ் சிவஞானசித்தியார்த் திருச் செய்யுளால் நன்கு விளங்கும். இங்ஙனம் இருவகைப் பிறவி அருமையுந் தேற்றுஞ் சைவசித்தாந்த உண்மை தேறாது, அம் மறுப்புரைகாரர் பெண் பிறவியையும் அவ்வாற்றால் இறைவன்றன் படைப்பினுயர்வையும் இழித்துரைக்கப் புக்கது, அவர் தமது வாழ்நாளெல்லாம் பழகிய மாயாவாதப் பொய்வழக்கினைச் சைவநூற் போர்வையுள் மறைந்துநின்று நாட்டி விடும் நோக்கங்கொண்டேயாம். இவர் எத்துணைதான் சைவவுண்மையினைத் திரித்து மறைக்க முயலினும், அது வைக்கோற் போரினால் மறைவுண்டு நில்லாத காழுந்தீப் போல், இவர்தஞ்சொற்பொருட் குவியலை நீறாக்கி மேற்கிளர்ந்து மிளிருமென்க. அது நிற்க.

மாதரார் தம்முள் அடியராதற்குத் தக்க தகுதியுடை யாரில்லையென்று இவர் துணிந்துரைத்த பீறலுரை, சைவநூல் உணர்ச்சியில்லாப் போலிச் சைவர்பாற் செல்லுமேயன்றி, அவ்வுணர்ச்சி சிறிது வாய்ந்த சிறார்மாட்டுஞ் செல்லாது. இத்தமிழுலகமெல்லாஞ் சிவமணங் கமழ்வித்தற்குத் தோன்றிய திருஞானசம்பந்தச் செந்தமிழ்ப் பைந்தாமரை மலர் முகிழைப் பாண்டிநாட்டுக்கு வருவித்து அதன் பெருகு மணத்தாற் சமண்முடை நீக்கி, அம் மலரினின்றும் பொழிந்த தமிழ்த்தேனிற் படிந்து நின்றவர் யார்? மங்கையர்க்கரசியாராம் “பங்கயச் செல்வி” யார் அல்லரோ! ஒரு முழுமுதற்கடவுள் உண்மை தேற்றும் அருமைச் சைவசமயந்தன்னை யகன்று பாழ்ங்கோள் பகருஞ் சமண்பாழி புகுந்த தன் இளவலை மீண்டுஞ் சைவம் புகுமாறு இறைவனை வேண்டி இத் தமிழ்நாட்டை வாழ்வித்த அலகில் பெரும்புகழார் யார்? திலகவதியாராம் நலமிகு நம்பரடியார் திருத்தொண்டை இம்பருலகில் நன்கு விளக்கித் தேவர்க்கரியோன் திருவருட் பேற்றை மாங்கனி யதனொடுந் தேங்கப்பெற்று, நெற்றிக் கண்ணன் கொற்றப் புகழைப் பைந்தமிழ்ப்பாவிற் சிறந்தப் பொழிந்த செல்வியார் யார்? சீரைக்கொண்ட காரைக்காற் பாவையாரல்லரோ! இங்ஙனமே, பிறைச்சடைப் பெருமான் பேரருள் மாந்திய அருகாச் சிறப்பிற் பரவையாருங் கொங்கலர் கூந்தற் சங்கிலியாரும் மகிழ்க்கீழிருந்த மாதொரு கூறனை மற்றவனருளால் தெற்றென வுணர்ந்துங், காதலர் பொருட்டுத் தூதனாய்க்கொண்டும், எத்திறத்தார்க்கும் எங்குங்கிட்டா ா

நங்கையாரல்லரோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/166&oldid=1592472" இலிருந்து மீள்விக்கப்பட்டது