உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

-30

மறைமலையம் - 30

மெய்த்தவமுடைய மெல்லியலாராகலின் அவரினுஞ் சிறந்த அடியாரும் அவரினுஞ் சிறந்த நல்லாருஞ் சுந்தரமூர்த்திகட்கு வேறுளர் கொல்லோ! இவ்வாறு நாச்சியா ரிருவருஞ் சிவபிரான் திருவடிக்கட் பெருகிய பேரன்புடையராதல் தேற்றுதற்கன்றோ, சுந்தரமூர்த்தி நாயனார்,

“பன்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்”

என்றருளிச் செய்தார். மாதருள் இழிந்தாரையன்றி உயர்ந் தாரைக் கண்டும் அறியாத தீவினையாளரே, பரவை சங்கிலி யாரை ஏனை மாதரோடு ஒப்பவைத் துரையாநிற்பர். ஆகவே, அம்மறுப்புரகாரதும் அவரோ டொத்தாரும் பரவை சங்கிலி யாரை அடியாரல்லரென இகழ்ந்துரைக்குமுரை, ஆன்றோர் கருதிப் பாராத பொருள் இல் இல் புல்லுரையா மென்று ஒதுக்குதலே செயற்பாலதென்க.

னிப், பண்டைத் தமிழாசிரியர் அறத்தை இல்லறந் துறவறம் என இருவேறுவகைப்படுத் துரைத்திலரெனவுந், துறவென்பது மனமாசு நீங்கி இறைவன் திருவடிக்கட் பதிந்த மெய்யன்பராய் எல்லா உயிர்கட்கும் இனியராய் நன்று செய் தொழுகும் ஒழுக்கமேயாம் எனவும், இவ்வொழுக்கம் மனைவி மக்கள் முதலான அன்புடையார் குழுவிலிருந்தே செய்யப் பட்டதன்றி அவரை அறத்துறந்து செய்யப்பட்டதின்றெனவும், இதற்குப் பெரிய புராணத்தின்கட் சொல்லப்பட்ட அடியார் பெரும்பாலாரின் வரலாறுகளே சான்றாமெனவும், மனைவி மக்கள் முதலான அன்புடையார் தம்மையெல்லாம் அல்லற்பட விட்டுத் தாம் தனியே சென்று துன்புறும் போலித்துறவு பௌத்த சமண் மதங்கள் இத்தென்றமிழ்நாட்டிற் புகுந்த காலந்தொட்டு அவரைப் பார்த்து இங்குள்ள ஒரு சிலராற் கைப்பற்றப்பட்ட தல்லது இங்கிருந்த சான்றோர்க்கு அது முழுதும் உடம்பாடன் றெனவும் யாம் எமது தலைமைப்பேருரையிற் பண்டை பனுவல் மேற்கோள்களுடன் விரித்துரைத்தேம். அவற்றிற் கெல்லாம் மாறுசொல்லமாட்டாத அம்மறுப்புரைகாரர், பட்டினத்தடிகள் இல்லத்தொடர்பு நீங்கிச் செயப்படுவதாகிய துறவினையே மேலதாய்க் கொண்டார் எனக் கரைந்தார்.

ப்

டினத்தடிகள் பௌத்தசமண் கோட்பாடு இங்கே புகுந்த பின்னிருந்து, அவர்போற் றாமுந் துறவு புகுந்தவராகலின் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/167&oldid=1592476" இலிருந்து மீள்விக்கப்பட்டது