உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

135

அப்புறத்துறவினை ஒரோ விடங்களில் மேலதாய் மிகுத்துக் கூறினார். ஆனாலும், அங்ஙனந் துறவு புகுந்தபின் தாம் அதனாற்பட்ட துன்பங்களை நினைந்து பார்த்து, இல்லத்துறவு புகுந்தவனிலும் அகத்துறவு புகுந்தவனே கழிபெருஞ்

சிறப்புடையன் என்பது தேற்றி,

66

“அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி

அதிகம் இல்லந் துறந்தான்,

அவனிற் சதகோடி உள்ளத் துறவுடையோன்

என்று அருளிச் செய்தமையும், பற்றற்றவர் உலகத்தவர் போற் காணப்படுதல் பற்றி அவரை வழிபடுதல் விடேன் மின் என்பது தேற்றுவாராய்,

“வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று

பார்த்தால் உலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே”

என்று அவர் அருளிச் செய்தமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. ஓராசிரியர் கருத்தை முற்றும் ஆய்ந்துபாராது, அவர் ஒரோ விடத்து மொழிந்த சிலவற்றையே அவர்தங் கருத்துறுதியாகக் கோடலினும் பெரியதொரு பிழைபாடாவது பிறிதில்லை. எத்துணைச் சிறந்த ஆசிரியர்க்கும் நாட் செல்லச்செல்ல ஒழுகலாறுகள் வேறுபடுதலின் அவர்தம் உணர்வும் அறிவுங் கூடவே வேறுபடும்; அவர் தமது வாழ்நாள் எல்லையில் அவ்வக்காலங்கடோறும் இயற்றிப் போந்த நூல்களையும் உரைகளையும் நன்காய்ந்து பார்க்கும் அறிவு மதுகை யுடையார்க்கு அவ்வாசிரியர் தம் ஒழுகலாறுகளும் அவை வாயிலாக அவரெய்திய உணர்வு வேறுபாடுகளும் நன்கு புலனாம். ஆகவே, ஓராசிரியர் ஒருகாற் சொன்ன ஒரு கருத்தை, அவர் முழுதுந் துணிந்த கருத்தாகக் கோடல் ஆய்ந்துணரும் அறிஞர்க்குச் சிறிதும் ஆகாது; மற்று அவ்வாசிரியர் அவ்வக் காலங்களில் வெளியிட்ட கருத்துக்களை யெல்லாம் புடைபட வைத்து அளந்து நோக்கி, அவை தம்முள் அவர் முடிவாகக் கண்ட கருத்து இது, அங்ஙனங் காணாததிது வெனத் துணிதலே உண்மை யுணர்வினார்க்குக் கடமையாகும். காலங்கடோறும் மக்கட்கு ஒழுகலாறுகள் வேறுபடுதலும், அவ்வாற்றால் அவர்தங் கருத்துக்களும் வேறுபடுதலுந் தெய்வப்புலமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/168&oldid=1592480" இலிருந்து மீள்விக்கப்பட்டது