உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

ம்

மறைமலையம் - 30

வானப்பிரத்தமும், அவரை அறந்துறந்து ஐயம் ஏற்றுண்டு திரியுஞ் சந்நியாசமும் என இருவகைப்படுமென்றுரைக்கின்றன. பிற கூறப்படுஞ் சந்நியாசம் வேதநூல்களிற் சொல்லப் பட்டிருந்தால், அதனை மறுப்புரைகாரர் எடுத்துக்காட்டு தலன்றோ செயல்வேண்டும்? அவ்வாறு காட்டுதற்கு அங்கு ஏதும் இடம் இன்மையின் அதனைவாளா கூறி யொழிந்தார். சான்றேதுங் காட்டாத இவரது போலி மறுப்புரை கொண்டே, மிருதிகாலத்துக்கு முன்னிருந்த முனிவரர்க்கு, மனைவி மக்களை அறத்துறந்து செல்லும் புறத்துறவு உடம்பாடாகாமை பெற்றாம். பௌத்த சமண்மதங்கள் தோன்றுதற்குமுன் இத்தகைய புறத்துற வினை எவரும் மேற்கொண்டில ரென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. வடமொழியில் மிகச் சிறந்த முனிவரரான யாக்கியவற்கியருங் 'காத்தியாயினி' 'மைத்திரேயி' என்னும் மனைவியார் இருவரை மணந்து, அவரோடொருங்கிருந்து துறவு நடாத்தினமை மறுப்புரைகாரர் அறியாமை இரங்கற் பாலதாகும். தமிழ்நாட்டின்கண்ணே தொல்லாசிரியரான தொல்காப்பியனாரும் மனைவி மக்களோ டிருந்து தவம் புரியந் துறவு வாழ்க்கையினையே விதந்து அருளிச்செய்தமையினையும் முன்னரே விளக்கிப் போந்தாம்.

இனி, “விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு” என்னுந் திருக்குறளைத் தமது போலிக்கொள்கைக்கு ஒரு துணையாக எடுத்துக்காட்டிய அம் மறுப்புரைகாரர், ஆ சிரியர் திருவள்ளுவர் தம் மனைவியாரோடிருந்து தவமியற்றிய உண்மை நிகழ்ச்சியினை மறந்துவிட்ட தென்னையோ? காதலிற் சிறந்த இல்லாளைத் துறந்துறைதலே ‘துறவு' என்பது அவர்தங் கருத்தாயின், தாம் அறிவுறுத்திய அறவுரைக்குத் தாமே மாறாக நடப்பரா? ஆதலால், “விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம்” என்று அவர்அருளிச் சய்த திருக்குறட் கருத்து, மறுப்புரைகாரர் தாம் வேண்டியவாறு ஏற்றிக்கூறிய அப் புன்பொருள் பயப்பதன்று. பின்னை என்னையோ அதன் கருத்தெனிற்; கூறுதும். அகலியை' என்னுந் தம் மனைவியோடிருந்து தவம் புரிந்த கௌதம முனிவரைச் சுட்டி,

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/187&oldid=1592523" இலிருந்து மீள்விக்கப்பட்டது