உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் - 30 -

வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியன்று. இவ்வுண்மையினையே தெய்வத் திருமூலரும்,

“ஐந்தும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை ஐந்தும் அடக்கில் அசேதனமா மென்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே'

என்றருளிச் செய்தார். ஆகவே, அகலியையை மணந்து அவளோடு இன்பந் துய்த்தபடியாகவே தவவொழுக்கத்தில் உறைத்துநின்ற கௌதம முனிவரை "ஐந்தவித்தான்” என்று ஆசிரியர் திருவள்ளுவர் உயர்த்து மொழிந்தது, அம் முனிவர் ஐம்புல நுகர்ச்சி வழியே தன்னுள்ளத்தைச் செல்லவிடாது, தன்

வழியே அவற்றின் நுகர்ச்சியை அமைத்துவைத்த

ஆற்றல்பற்றியேயா மென்பதனை அம் மறுப்புரைகாரர் இனியேனுந் தெளிந்துகொள்ளக் கடவராக!

இனித், திருநாவுக்கரசுகள் தமதிளமைக்காலத்திற் சமண் நூல்களைக் கற்றுஞ் சமண் முனிவர்களோடு பழகியும் அவர் கைக்கொண்ட துறவொழுக்கமே சிறந்ததெனக் கருதியன்றோ, சிவநேயத்திற் சிறந்த தம் தமக்கையார் திலகவதியாரையும் ஏனைத் தமது இல்லத் தொடர்பினையும் விட்டுச் சென்று, பாழ்ங்கொள்கை (நாத்திகம்) பேசுஞ் சமண்மதம் புகுந்து தம் வாழ்நாளிற் பெரும்பகுதியை வறிதாக்கினார்? இதனை, அரசுகளே தாம் அருளிச் செய்த “ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய்’ என்னுந் திருப்பாதிரிப்புலியூர்த் திருப்பதிகத்தில்,

"திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்த அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே"

என்னும் இறுதிச் செய்யுளிற் குறிப்பிட் டிருத்தல் காண்க. அரசுகள் தமது முதுமைக்காலத்தே மீண்டுஞ் சைவசமயம் புகுந்து சிவபிரான் திருவடிக்கு ஆளான பின்னர், இளமைக் காலத்தே தாம் துறவு புகுந்தது பிசகென்றும், சைவசமயச் சான்றோர் இறைவன் திருவுளப்பாங்கறிந்து வகுத்தபடியே

மனைவியோடிருந்து

இன்பந் துய்த்துக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/189&oldid=1592525" இலிருந்து மீள்விக்கப்பட்டது