உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

157

தவவொழுக்கத்தில் நிற்றலே சிறந்த தென்றும் உணர்ந்தன்றோ, "வென்றிலேன் புலன்களைந்தும்'

திருப்பதிகத்தின்கண்,

என்னும்

பொதுத்

“விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன் எந்தாய், காமரங் கற்று மில்லேன், தளையவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த இளைஞனும் அல்லேன் எந்தாய், என்செய்வான் தோன்றினேனே”

என்று அருளிச்செய்தார். இவ்வாறாக, அப்பர் முதலில் மேற்கொண்ட துறவு சமண்மதவழித்தாதல் தெள்ளிதிற் புலப்படுவதாகவும், அஃது அவ்வழித் தன்றென்று கரைந்த அம் மறுப்புரைகாரருரை பெரும் புளுகுரையாதல் தேர்ந்துகொள்க.

னி, மாணிக்கவாசகரோ அப்பரைப்போற் சமண் சமயமாதல் பௌத்த சமயமாதல் சிறந்ததெனக்கொண்டு அவ்விரண்டில் ஒன்றிற் றுறவு புகுந்தவரல்லர். அவர் தெய்வம் ஒன்று உண்டு எனத் துணிந்த காலத்தில் ஒன்றினொன்று மாறுபட்ட பல சமயக்கொள்கைகளால் உளளங்கலங்கி, ஒன்றிலுந் துணிவு பிறவாது நின்றார்! அப்போது சடுதியில் இறைவனே குருவடிவிற்போந்து அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டான். இஃது, அவரே அருளிச் செய்த போற்றித் திருவகலில்,

“தெய்வம் என்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருது கருதலும் ஆறுகோடி மாயா சத்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்; சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும், விரத மேபரமாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/190&oldid=1592526" இலிருந்து மீள்விக்கப்பட்டது