உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

-30

மறைமலையம் - 30

சண்ட மாருதஞ் சுழித்தடித்து ஆஅர்ந்து உலோகா யாதெனனும் ணட்டிறற் பாம்பின்

கலாபே தத்த கடுவிடம் எய்தி

அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்,

மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே”

எனக் கூறுமாற்றால் தெற்றென விளங்கா நிற்கும். இறைவனால் அங்ஙனம் ஆட்கொள்ளப் பெற்ற பின்னுஞ் சிவபெருமான் திருவடிக்கண் மெய்யன்புடையரான அவர் தம் மனைவியாரும் புதல்வியும் அவர் தம்முடனேயே யிருக்கப் பெற்றார் என்னும் உண்மையினை எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் நக்குவிளக்கி நக்குவிளக்கி யிருக்கின்றேம். எனவே மாணிக்கவாசகர் தம் அருமை மனைவியாரையும் மகளாரையும் விட்டுத் துறவு புகுந்தவரல்ல ரென்பது நன்கு பெறப்படுதலால், அம் மறுப்புரைகாரர் அவரை மிருதிவழித்தான துறவு புகுந்தவர் என்றுரைத்தது பொருந்தாப் பொய்யுரையாதல் கண்டுகொள்க.

இனிப், பட்டினத்தடிகள் புகுந்த துறவு பண்டைச் சைவசமயச் சான்றோர்க்கு உடம்பாடாகாததொன் றென்பதும், அதனை அவரே பின்னருணர்ந்து அகத்துறவினையே மேல தாய்க் கூறினரென்பதும் முன்னரே விளக்கிப் போந்தாம். இவ்வளவில் அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவுக்கும் விடைகள் தரப்பட்டன. இது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/191&oldid=1592527" இலிருந்து மீள்விக்கப்பட்டது