உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

19. பின்னுரை

மேலெழுதிய எம்முடைய விடைகளை, அம் மறுப்புரை காரர் நிகழ்த்திய தடைகளோடு உடன்வைத்து நடுநின்று காணவல்ல மெய்யறிவினார்க்கு, எமதுரையின் மெய்ம்மையும் அவருரையின் பொய்ம்மையுந் தாமே புலனாம். அவர் தாமும் நடுவுநின்று நோக்குவராயின் எமதுரையே மெய்யாதல் காண்பர். ஆனால், தமதுரைப் பிழையைத் தாம் ஒப்புக் கொண்டால் உலகந் தம்மைப் பாராட்டாதெனக் கருதிச், சன்ற ஐப்பசி 19 இலும் 29 இலும் வெளிவந்த 'சிவநேசன்’ இதழில் எமதுரையை 'வெற்றுரை' யெனப் பழித்து உள்ளீடழிந்த பதர்மொழிகளையே நிறைத்திருக்கின்றார். அவர் நிகழ்த்திய தடைகளெல்லாவற்றிற்கும் விடைகள் எமது ஞானசாகர இதழில் யாம் முறையாக எழுதி வருதலையும் பாராது, சித்தாந்த' இதழிற் பலரும் எழுதுங் கட்டுரை கட்கிடையே முழுதும் வெளியிடுவியாமல் ஒரு சிறிதே வெளியிடுவித்த எமது விடையுரையின் முதற் பகுதியை மட்டும் பார்த்துவிட்டுத், தாம் நிகழ்த்திய தடைகள் எல்லாவற்றிற்கும் யாம் விடையெழுதிற்றிலே மென ஆராயாது கூறி மகிழ்ந்தார். இனி, அவர் மீண்டுங் கூறிய தடைகட்கு விடைகளைச் சுருக்கிக்கூறி அவ்வளவில் இதனை முடிப்பாம்.

காதலன்பு கொண்டார்க்கு அக் காதலன்பின் வழியே மனஞ் செல்லுமென்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைகாரர், விரும்பத்தக்க தொன்றனை மனமானது முதலிற்பற்றிய பின்னரேதான் காதல் நிகழும், அதன்பிற் காதல் சென்ற வழியே மனஞ் செல்லுமென ஒன்றனையொன்று பற்றுதல் என்னுங் குற்றம் (அந்நோய்யாசிரயதோஷம்) ப மொழிந்தார்; என்னை? மனத்தின்பிற் காதலுங், காதலின் பின் மனமுஞ் செல்லுமென்றல் அக்குற்றமுடையதாகலி னென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/192&oldid=1592528" இலிருந்து மீள்விக்கப்பட்டது