உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் - 30

மனம் முன்னரொரு பொருளைப் பற்றினாலன்றி உணர்வு உண்டாகாமை யுண்மையேயாகலின், மற்று அக்குற்றம் படாமை யுரைக்குமாறு யாங்ஙனமெனிற், காட்டுதும், மெய்

வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளின்

து

வாயிலானன்றி மனம் புறத்தே ஒரு பொருளைப் பற்றாது; ஆகவே, அப் பொறி யுணர்வுகளைப்பற்றி நின்று மனம் ஒரு பொருளைப் பற்றுகின்றுழி, அஃது அப் பொறியுணர்வி னளவாயே நிற்குமல்லது, அவற்றின் வேறாய் நின்று தான்கண்ட பொருட்குணங்களை ஆராயாது; இது குறித்தே, உற்றறி தலாகிய ஓரறிவுமுதல், சுவை ஒளி ஓசை நாற்றம் ஈறாக ஐந்தறிவு உடைய சிற்றுயிர்கட்கு ஆசிரியர் தொல்காப்பியனார் மனவுணர்வு கூறிற்றிலர். ஏனை மக்களாவார், அவ் வைந்தறிவுகளோடு 'இஃது இதனை ஒப்பது,' இஃது இதனின் வேறாவது, இது நல்லது, இது தீயது’ என ஆராய்ந்தறிவு மறிவும் உடன் உடையராகலின் அவரைச் சுட்டி "மக்கடாமே யாற்றி வுயிரே” என்று அவர் அருளிச்செய்தார். அற்றேல் ‘ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப உளம்நிற்ப என்று ஆசிரியர் மெய்கண்டதேவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனா ருரையொடு மாறுகொள்ளாதோ வெனிற், கொள்ளாது; பாறியுணர்வின் வேறாய் நில்லாது, பொறியுணர் விளைவாயே நிற்பது மனத்தின் பொதுவியல்பு ஆகும்; மற்றுப், பொறிகளின் வாயிலாய் அறிந்த பொருட்பண்புகளைத் தான் தனிநின்று ஆராயுமாயின் அது தான் மனத்திற்குச் சிறப்பியல்பு ஆகும்; மக்களல்லாத சிற்றுயிர்களில் மனவுணர்வு தனித்துநில்லாது பொறிகளினளவாயே நிற்றலின் அவை மனவுணர்வு இல்லாதனவென்று கொள்ளப்பட்டன; மற்று, மக்களில் அது பொறியுணர்வுகளின் வேறாயும் நின் ஆராய்ந்தறியுஞ் சிறப்பியல்பும் உடைமைபற்றி, அவர் மனவுணர்வும் உடையரெனப்பட்டார். ஆகவே, சிறப்பியல்பு காட்டாமற் பொறியளவாய் நிற்கும் மனவுணர்வைச் சிற்றுயிர்கட்குத் தொல்காப்பியனார் கூறாமை பெரிதும் பொருத்தமாவதேயாம். என்றாலும், மனத்தின் சேர்க்கையின்றிப் பொறியுணர்வுகள் நிகழழமையின், மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் மனவுணர்வு உண்டென்பது தேற்றமேயாம்.

இவ்வாறு மனத்தினியல்பைக் காணவல்லார்க்குத்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/193&oldid=1592529" இலிருந்து மீள்விக்கப்பட்டது