உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

161

தொல்காப்பியனாருரையும் மெய் கண்ட தேவருரையுந் தம்முள் முரணாமை எளிதின் விளங்கும். அது நிற்க.

பொறியுணர்வுகளோடொன்றாய் நிற்கும் மனத்தின் வழிச் சன்று கண்ட கண்ட பொருள்களை யெல்லாம் விழையும் இயற்கையதே காமவிருப்பம்; அங்ஙனம் கண்டவற்றில்ெலாம் அவாச் செல்லாது மனத்தின் பொது வியல்பையடக்கி, மிகச் சிறந்ததொரு பொருளிடத்தேமட்டும் நினைவு அழுந்தி அன்பு மீதூரப்பெறுவதே காதல்விருப்பமாகும். எனவே, புலனுணர்வு களின்பாற் பொதுமையின் நிற்கும் மனத்தின் வழிச்செல்வது உயிரின் காமவிருப்பமேயாமென்பதும், அங்ஙனம் வரைதுறையின்றி ஓடற்பாலதாகிய உயிரின் விருப்பத்தைத் தடைசெய்து விழுமியதொரு பொருளினிடத்தே மட்டும் உறைத்து நிற்குமாறு செய்வதே காதல் விருப்பமாமென்பதும் இனிது பெறப்படுதலிற், காதல் மனத்தின்வழியதன்றென்னும் எமதுரையே பொருத்தமாதல் கண்டுகொள்க. காதற்றோற்றத் திற்குப் பொறியுணர்வாய்நிற்கும் மனம் வாயிலாதல் கொண்டு, காதலை அம்மனத்தின்வயமாய் அடக்குதலினும் அறிவின்மை யாவது பிறிதில்லை; விறகிலிருந்து தோன்றுந் தீ அவ் விறகின் வலிக்கு அடங்கியதென்பா ருரையோடு ஒன்றாகவைத்து அம் மறுப்புரைகாரருரை நகையாடி விடுக்கற்பாலதாமென்றொழிக.

இனிப், பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச்சான்றோ ரெல்லாரும் இன்பத்துக்கே முதன்மை தந்தியற்றிய பொய்யாச் செந்தமிழ்ச் செய்யுள் வழக்கின் மிகுதியை யாம் எடுத்துக் காட்டியிருக்கப், பொய்ந்நூல்களாகிய புராணங்களின் விரிவையும் மெய்ந்நூலாகிய சிவஞானபோதத்தின் சுருக்கத்தையும் எமதுரைக்கு உவமையாக எடுத்துக்காட்டி எம்மை இகழ்கின்றார். பண்டைச் செந்தமிழ்நூல்கள் வட மொழிப் புராணங்களைப் போற் பொய்ந்நூல்களாயிருப்பினன்றோ, அவற்றை அவர் அவற்றிற்கு உவமையாக எடுத்துக்காட்டலாம். பொய்ப் பொருள் ஒன்றுமே விரவாத முழுமணித் தொகுதி யாகிய பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களைப், புராணப் பொய்க் குப்பைகளோடு ஒப்புமைப்படுத்திய அம்மறுப்புரை காரரின் பொய்யறிவின் பெற்றிமைக்கு அறிவுடையார் இரங்குதலே செயற்பாலார். பொய்யறிவினார்க்கு மெய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/194&oldid=1592530" இலிருந்து மீள்விக்கப்பட்டது