உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் - 30 -

பொய்யாகக் காணப்படுமென்பதற்கு அம் மறுப்புரைகாரர் ஓரிலக்கியமாதல் காண்மின்

இனித், தொல்காப்பிய நூல் தனக்கு முற்பட்ட இலக்கிய நூல்களின் அமைதியைப் பார்த்துச் செய்யப்பட்ட தொரு பழைய நூலாகலின், தொல்காப்பியத்தில் “இன்பமும் பொருளும் அறனும்” என்று வைத்துச் சொல்லப்பட்ட முறை, ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் முற்பட்ட தனிச் செந்தமிழ்ச் சான்றோர் கொண்ட முறையேயாகும். ஆகவே, தொல்காப்பி யனார் கொண்ட முறையே, செந்தமிழச்சான்றோர் வழிபேணும் எம்மனோர் பேணுதற்குரித்தாவது. தொல்காப்பியனார்க்குப் பின்வந்த நூல்களில் ஆரியமொழிக் கலப்பும் பௌத்த சமண்கோட் கலப்புங் காணப்படுதலின், அவை யெல்லாந் தொல்காப்பியம் போல் எமக்குத் தலை சிறந்த மேற்கோள்கள் ஆகா; தொல்காப்பியத்தொடு மாறுகொளா இடங்களில் மட்டுமே ஏனைப் ஏ பின்நூல்களில் வந்தவை

எம்மாற் றழுவற்பாலன; மற்றுத் தொல்காப்பியத்தொடு மாறுபடு மிடங்களில்ெலாந், தால்காப்பியமே தழுவற்பால தன்றி ஏனைய அல்லவென்று துணிக; என்னை? தொல் காப்பியத்தோடு எதிர்நிற்கவல்லது ஏதுமேயில்லையாகலின். தெய்வத்திருவள்ளுவருந் தொல்காப்பியத்தொடு மாறுபடாமைப் பொருட்டன்றோ, தமக்கும் பிறர்க்கும் இன்பத்தைத் தரும் இல்லறத்தை முன்வைத்து, அவ்வில்லறத்தோடொத்த துறவறத்தை அதன்பின் வைத்ததூஉம், நூலிறுதியிலுங் காதலின்பத்தையே மிகுத்துக்கூறியதூஉம் என்க. ‘இன்பம் பொருள் அறம்' என்னும் முறையைத் தொல்காப்பியத் தினின்றும் யாம் எடுத்துக் காட்டியிருக்க, ஒரு நூலிலிருந் தாயினும் யாம் அம் முறையை எடுத்துக்காட்டவில்லையென்ற அம்மறுப்புரைகாரர் பொய்ந்நாவினை ஒறுக்கற்பாலதென்க.

அறக்கடவுளே

இனி, அம்மறுப்புரைகாரர் அறத்தை முன்வைத்துச் சொல்லுந் தேவாரதிருவாசகச் செந்தமிழ்மாமறைச் செய்யுட்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, அவ்வருள் நூல்களில் அறமே முன்வைத்துரைக்கப்பட்டமையின் அதுவே முதன்மை யுடைத்தென்றார். அற்றேல் தேவாரதிருவாசகங்கள்

தோற்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகட்குமுன்னே தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/195&oldid=1592531" இலிருந்து மீள்விக்கப்பட்டது