உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

6

163

அறுதியில் தமிழின் உறுதிப்பொருட் பரப்பெல்லாம் ஒருங்கு கண்ட ‘தொல்காப்பியம்' அருள் நூலன்றோ? தொல் காப்பியத்தில் 'இன்பமே' முதல்வைத்து மொழியப்பட்டிருத்த லானும், மக்கள் இம்மையிற் றுய்ப்பதும், மறுமை யிற் சிவபிரான்திருவருளிற் கலந்து துய்ப்பதும் இன்பமே யன்றி ‘அறம்’ அன்று ஆகலானும், 'அறம்' எனப்படுவதும் னையுயிர்க்குந் தன்னுயிர்க்கும் இன்பத்தைச் செய்யுஞ் செயலேயாகலானும், அவ்வாற்றால் அறமும் பொருளுங் கூட இன்பத்துள் அடங்குதலானும், தால்லாசிரியரான தொல்காப்பியனார் இன்பத்துக்கு முதன்மை தந்து அதனை முதற்கண் நிறுத்தினமையே சாலப் பொருந்துவதாமென்க. பௌத்த சமண் கொள்கைகள் மிகப்பரவி, அவ்வாற்றால் அறத்தை முன்வைத்துரைக்கு முறை மிக்குவழங்கிய காலங்களில் திருவாசக தேவாரங்கள் தோன்றினவாகலின், அவற்றுள்ளும் அம்முறை புகலாயிற்றென் றறிந்து கொள்க. அறஞ்செய்தலாற் பிறர்க்குந் தமக்கும் இன்பம் விளைதல அறியவல்லவர் மக்களேயன்றி ஏனைச்சிற்றுயிர்கள் அல்ல. சிற்றுயிர்களெல்லாந் தம்மளவில் இன்பம் நுகர்வன; மக்களோ பிறர்க்கும் நன்றாற்றிப் பெரிதும் இன்பம் எய்துவர். இங்ஙனம் எய்தும் இன்பம் மக்கட்கே சிறந்தமையின், அதுவே முதன்மையுடைத்தென்பது இதுபற்றியன்றே தெய்வத் திருவள்ளுவரும் “அறத்தான் வருதே இன்பம்” என்றருளிச்செய்தார். இப்பெற்றித்தாகிய இன்பத்தை டு, 'அறம்' என்பது தனிநில்லாமையின், அஃது இன்பத்திற்குப் பின்னாவதேயன்றி முன்னாம் முதன்மையுடையத்தன்றென உணர்ந்துகொள்க.

L

இனி, பௌத்த சமண் கோட்பாடுகள் இங்கே மிகவும் பரவி, அறம் அல்லாதவைகள் அறம் எனக் கொள்ளப் பட்டமையின்; இன்பத்தின்வழித்தாகிய அறம் இன்னதென வுணர்த்துதற்குத் திருவள்ளுவர் அறத்தை முன்னெடுத்து, அச்சொல்லால் தனக்கும் பிறர்க்கும் இன்பத்தை விளைத்தற் கேதுவாகிய 'இல்லறத்தை' முதற்கண் நிறுத்தி வலியுறுத்தார். மற்று, அம்மறுப்புரைகாரரோ, தொல்காப்பியனார் காலத்து மக்கட்கு அறவுணர்ச்சியின்றி, இன்பவுணர்ச்சியே மிக்கிருந் தமையின் அவர் அதனை முதலிற் கூறினாரென்று ஏன் கூறுதலாகாதென்று வினவுகின்றார். சான்றில்லாமல் ஒன்றைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/196&oldid=1592532" இலிருந்து மீள்விக்கப்பட்டது