உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் - 30

தானாகவே படைத்து மொழிதல், பொய்கூறுவார்க்கன்றி மெய்ம்மையுடையார்க்கு ஏலாது. மேலும், இன்பவுணர்ச்சியே தலைக்கொண்ட தொல்காப்பியார் காலத்து நன்மக்கட்கு, இன்பத்தைச் செய்யும் அறவொழுக்கமே உளதாகுமன்றித் துன்பத்தைச் செய்யும் மறவொழுக்கம் உளதாகாதென்று அம்மறுப்புரைகாரர் அறியக் கடவராக!

இனித், திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் வேதத் தாடர்புடையதாகுமென்ற அம்மறுப்புரைகாரர் எந்த வேதத்தோடு தொடர்புடைய தென்பதனை விளக்கினாரில்லை. இப்போது வேதம் என வழங்கும் இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்பவற்றோரு தொடர்புடையதென்பது அவர் கருத்தாயின், அவ்வாரிய நூல்களிலுள்ள பொருள்களையுந் திருக்குறளி லுள்ள பொருள்களையும் எடுத்துக்காட்டி அவ்விரண்டிற்கும் உள்ள பொருளொற்றுமையினை அவர் விளக்கியிருத்தல் வேண்டும்; அவ்வாறவர் செய்திலாமையின் அவர்கூற்று உள்ளீடில்லா வெறும்பதரேயாம். திருக்குறள், இருக்கு முதலான ஆரிய நூற்றொடர்பு உடையதன் றென்பதனை வேளாளர் நாகரிகம் முதலான எம்முடைய நூல்களில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; ஆண்டதனைக் காண்க.

இனி, ஆரியத்திற்குக் குறைசொல்லலும், வேதாகமக் கருத்துக்கு வேறான தனித்த ஒரு நூலுண்டென்பதுந் தீவினை யாளர்செயல் என்று கூறி மறுப்புரைகாரர் இகழ்ச்சியுரைகளை வாரியிறைத்துத், தமது தோல்வியைப் பிறிதொன்று சொல்லி மறைக்கின்றார். இவர் வேதாகமம் எனக் கொண்டவை யாவை? இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்றுங், காமிகங் காரணம் யோகஜம் சிந்தியம் என்றும் வழங்கும் வடமொழி நூல்கள் தாமா? இந்நூல்களை வேதம் என்றும் ஆகமம் என்றும் வழங்கியவர்கள் யாவர்? அவர் காலம் யாது? அவ்வாரிய நூல்களிற் சொல்லப்பட்ட பொருள்கள் யாவை? அவைகளைத் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றினார் யார்? அவர்களிருந்த காலம் என்னை? நான்கு வேதங்களும் ஒரே காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா? இருபத்தொட்டாகமங்களும் அங்ஙனமே ஒரு காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா அருணந்தி சிவாசாரியார் வேதநூல் என்றுஞ் சைவ நூலென்றுங் குறிப்பிட்டவை மேற்சொன்ன ஆரியநூல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/197&oldid=1592533" இலிருந்து மீள்விக்கப்பட்டது