உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

165

தாம் என்பதற்குச் சான்றென்னை? அருணந்தியார் காலம் யாது? மறுப்புரைகாரர் கொண்டஆகமங்கள் அருணந்தியார் காலத்திற்கு முன்னிருந்தவையென்பதற்குச் சான்றென்னை? இருக்கு முதலிய மேற்பட்ட பன்னிரண்டு

வடநூல்களிற் தத்துவங்கள்

பிரகிருதிக்கு

கூறப் பட்டிருக்கின்றனவா? திருநீறும் உருத்திராக்கமுஞ் சிவபிரான் திருக்கோயில்களும் இருக்கு எசுர் முதலிய நூல்களிற் சொல்லப் பட்டிருக்கின்றனவா? என்றற்றொடக்கத்து வினாக்களுக்கு விடையாக ஆராய்ந்து நிறுவற்பாலனவற்றை மெய்ச்சான்று களுடன் நிறுவினாலன்றி, அம்மறுப்புரைகாரர் பொறாமையுஞ் செருக்குஞ் சினமுங்கொண்டு எமக்கு மாறாய் வடநூல் கட்கு ஏற்றஞ் சொல்லும் உரை, சிறுமகார் காலம் விளைத்து ஏசும் உரையாகவே ஒதுக்கற்பாலதென்க. இருக்கு முதலான ஆரிய நூல்களிற் கொலை குடி சூது வரையிறந்தகாமம் பொய் முதலான கொடுந்தீயொழுக்க உரைகளே நிரம்பியிருத்தலையுந், திருக்குறள் முதலான தெய்வச்செந்தமிழ் நூல்களில் அவற்றை மறுத்த நல்லொழுக்க அறிவுரைகளே நிரம்பியிருத்தலையும் அம்மறுப்புரைகாரர்ஆராய்ந்து கண்டனராயின் இங்ஙன மெல்லாம் எம்மேற் சினங்கொண்டு கூவார். அவ்விருவகை நூல்கட்கு முள்ள வேறுபாடுகளை அந்நூல்களிற் கண்டறிய மட்டாத அவர், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது நூலிலாயினுங் கண்டறிந்து தெளியக்கடவராக! மேற் ஆரியநூல் களிலுள்ள குறைகளை எடுத்துக் காட்டுதலுந், தமிழ்நூல்களிலுள்ள நலங்களை எடுத்து விரித்தலுங் குற்றமாகுமா? களிம்பேறிய செம்பைச் செம்பென்றுங், களிம்பில்லாச் சுடர்விரி பசும் பொன்னைப் பொன்னென்றுங் கூறுதல் குற்றமாகுமா? செங்கல்லைச் செங்கலென்றுஞ், செஞ்சுடர் எறிக்குஞ் செம்மணியைச் செம்மணியென்றுங் கூறுதல் குறையாகுமா? உயிரை மாய்க்கும் பாம்பின் நஞ்சை நஞ்சென்றும், உயிரைவளர்க்குந் தீம்பாலமிழ்தை அமிழ்தென்றும் மொழிதல் பழிப்பாகுமா? இவைதம்மையெல்லாம் ஆராய்ந்து பாராது, தீய நஞ்சையுந் தீம்பாலையும் ஒன்றாகப் பாராட்டல் வேண்டு மெனபாரோடொத்துத், தீதுநிறைந்த ஆரிய நூல்களையும், நலன்நிறைந்த தமிழ்நூல்களையும் ஒருங்கு பாராட்டல் வேண்டுமென்னும் அம்மறுப்புரைகாரர், தாம் வேலைபார்க்கும் இடத்தில் தாம் பெறும் வெள்ளிக்காசுகளுக்கு மாறாக, ஓட்டுச்

சான்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/198&oldid=1592534" இலிருந்து மீள்விக்கப்பட்டது