உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் - 30

சல்லிகளைப் பெற்று மகிழ்ந்திருப்பரா? பகுத்தறிவில்லாத இவருரை சிறுமகாரானும் எள்ளி நகையாடற் பாலதா மென்றுணர்க. தீதுநிறைந்த ஆரியநூல்களின் குறைகளைத்தாம் எடுத்துக்காட்டினமேயன்றி, நலன் நிறைந்த பன்னிரண்டு பழைய ஆரிய உபநிடத

மறைகளை அவ்வாறு செய்தனமா? அவ்வுபநிடதங்களை யாம் பாராட்டிப் பேசியிருத்தலை இவர்அறியாராயின், அவ்வறியாமைக்கும் யாம் என்செய்வேம்

என்க.

இனிக், காதலின்பத்தின் வழியானன்றி இல்லறம் இனிது

நடவாமை,

“காதன் மடவாளுங் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமஞ் செய்பவே’

என்னும் ஆன்றோர் திருமொழியால் நன்கு விளங்கா நிற்கவுந், திருவள்ளுவர் இல்லறவியலிற் காதலின்பங் கூறிற்றிலர் என்று மறித்தும் மறித்தும் அரற்றுகின்றார் அம்மறுப்புரை காரர்; “தெய்வந் தொழா அள் கொழுநற் றொழுதெழுவா” ளாகிய மனைவிக்குக் காதலன்பு வாய்ப்பினன்றி, அவள் அவனை ஒருபொருட்டாக வையாளென்பதை அறியமாட்டாத அவர்க்கு அறிவுதெருட்டும் வாயிலில்லை யென்றுவிடுக்க. தருக்க முறையும் ஆராய்ச்சிமுறையும் நன்கறியமாட்டாத அம்மறுப்புரை காரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவும் பிழைபாடுடை வென்பது, தமிழ் ஆரியம் ஆங்கிலம் என்னும் மொழிநூல்களில் உண்மை யாராய்ச்சி செய்தார்க்கு வெள்ளிடைமலைபோல் விளங்குமாதலின், மறுப்புரைகாரர் கண்டறிந்த தோல்வித் தானங்கள் அத்தனையும் அத்தனையும் அவர்க்கே உரிமையுடையன

வென்பது பொள்ளெனப் புலனாம்.

“அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார்'

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

முற்றும் -

16

யன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/199&oldid=1592535" இலிருந்து மீள்விக்கப்பட்டது