உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

சான்றாகச் சிலவும் அடிகள் உள்ளகமும்

5.1.1898

7.1.1898

12.1.1898

23.2.1898

4.3.1898

24.4.1894

7.1.1899

13.1.1899

3.3.1900

30.8.1900

சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன். பகவத் கீதையைத் தமிழ்ப் பாடல் வடிவில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன்.

பொங்கல் விழாவைச் சிறப்புக் கொண்டாடினேன். குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் சிலப்பதிகாரப் பாடம் நடத்தினேன்.

குறிப்பு (குலாம் காதிறு நாவலர் மதுரை நான்காம் தமிழ்ச் சங்க மான்மியம் இயற்றியவர்)

இன்று நல்லநாள் இல்லை ஆதலால் கிறித்தவக் கல்லூரிப் பொறுப்பு ஏற்கவில்லை.

தமிழ்ச் சைவ சித்தாந்த சபை தொடங்குவபது குறித்துக் கலந்து பேசினோம்.

குறிப்பு (கலந்து பேசியவர்கள்: சூரிய நாராயண சாத்திரியார், அனவரத விநாயகர், பாலசுந்தரர்)

குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமியமதக் கருத்துகளை இந்துத்தானி முன்சி வாயிலாக அறிந்து கொண்டேன்.

கி.பி. 986 இல் வைணவப் பெரியார் இராமாநுச ஆச்சாரியார் பிறந்தார்.

இராம கிருஷ்ணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன்.

பேராசிரியர் மாக்சு மூலரின் ஊடிஅயீயசயவளைந யீரடைடிபல படித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/204&oldid=1592543" இலிருந்து மீள்விக்கப்பட்டது