உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

3.1.2.1900

25.3.1901

22.12.1901

3.2.1903

24.6.1903

5.5.1905

13.5.1905

2.12.1905

15.4.1906

22.12.1906

27.1.1907

27.11.1907

10.8.1909

14.1.1910

மறைமலையம் - 30

வேதாக மோக்த சைவ சித்தாந்த சமையைத் தொடங்கு வதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன்.

உபநிடதங்கள் வாடகை நூலகத்திருந்து பெற்றேன்.

விவேகானந்தரின் பக்தியோகம் கர்ம யோகம் ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன்.

சிவனடியார் கூட்டச் சைவப் பிரசாரகரமாக இருக்க இணங்கினேன்.

சைவ சமயமே சமயம் என்று உரையாற்றினேன். பாலகங்காதர திலகரின் வேதம் பற்றி நூலைப் படிக்கத் தொடங்கினேன்.

விவேகானந்தரின் ஞானயோகம் வாங்கிப் பயின்றேன். நுண்ணியவையாகவும் அருமையாகவும் இருந்தன. ஈசோப நிடதத்திற்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன்.

இவ்வாண்டில் நான் செய்த அருஞ் செயல், சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டியதே யாம்.

பிராணாயாமம் பற்றிய உரையை எழுதினேன்.

தவத்திரு. இராசானந்த சுவாமிகள் எனக்கு நிட்டை அருளினார்.

சிவஞான போதத்திற்கு விரிவுரை எழுதத் தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன்.

ஈசனும் உமையுமே கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன். கடவுளிடம் வேண்டுவன் மூலம் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத்தில் உள்ளது. மேன்மை பெற்ற ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அனைத்து நம் முயற்சியையே சார்ந்துளது.

வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீல கண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழி பெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடு உடையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/205&oldid=1592544" இலிருந்து மீள்விக்கப்பட்டது