உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் - 30 -30

3-3-1898 4மணி தொடர்வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டேன்.

4-3-1898 இன்று காலை சென்னை வந்தடைந்ததும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் இல்லம் சென்றேன். இன்று நல்ல நாள் இல்லையாதலால் கிறித்தவக் கல்லூரியில் பொறுப்பேற்க வில்லை... மாலையில் சூரியநாராயண சாஸ்திரியவர்களைக் காணச் சென்றேன்.

9-3-1898 11 மணிக்குச் சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்றேன்... பாடம் நடத்தினேன்....

16-3-1898 என் மனைவியும், திரு. சபாபதிப் பிள்ளையும் அவர்தம் மனைவியும் நாகப்பட்டினத்திலிருந்து வந்தனர். ஸ்ரீ அருணாசலம் கோயிலுக்குரிய வீட்டில், மாலைக்குள் எல்லாப் பொருள்களையும் என் மனைவி எடுத்து வைத்தாள். கிறித்தவக் கல்லூரியிலிருந்து 3.30 மணிக்குத் திரும்பினேன்.

22-3-1898 தொண்டை மண்டல மேல்நிலைப் பள்ளித் தமிழ்ப் பண்டிதர் சிவப்பிரகாச ஐயர் நன்னூல் விருத்தி யுரையும் சீவக சிந்தாமணியும் பாடம் கேட்க வந்தார்.

30-3-1898 சிவாசல நான்மணிமாலையைத் தருவதற்கென

ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் இல்லம் சென்றேன்.

1-4-1898 திரு. சூரியநாராயண சாஸ்திரி சிவாசல நான்மணி மாலைக்குச் சாற்றுக்கவி அளித்தார்.

5-4-1898 ‘முதற்குறள் வாத நிராகரண'த்தின் மெய்ப்புப் படிகளுடன் ஒரு கடிதத்தையும் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் கொடுத் தனுப்பினார்.

11-4-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைக் காணச் சென்றேன். ‘வினாவிடை’ ஒன்றைச் சரிபார்ப்பதில் மாலைவரை நேரம் சென்றது.

15-4-1898 இ ன் று மாலை சி.என். அச்சகம் சென்று ‘முதற்குறள்வாத நிராகரணம்' அச்சடித்த முழுப்படியைப் பெற்று வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/213&oldid=1592555" இலிருந்து மீள்விக்கப்பட்டது