உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

179

1-2-1898 சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழப் பண்டிதர் சூரியநாராயண சாஸ்திரியவர்களிடமிருந்து அஞ்சலட்டை வந்தது.

3-2-1898 திருவாவடுதுறைக்கு நான் சென்றமை அறிந்து மகிழ்ந்தும், சென்னை கிறித்தவக் கல்லூரிப் பண்டிதர் வேலை எனக்குக் கிடைக்கும் என்று வாழ்த்தியும் தண்டலம் பாலசுந்தர முதலியாரவர்கள் விடுத்த மடல் வரப்பெற்றேன்.

4-2-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைப் பற்றிப் பாடல் புனைந்தேன்.

5-2-1898 என்னருமை நண்பர் சூரியநாராயண சாஸ்திரி யவர்கள் எழுதிய 'தற்காப்பு நியமம்' படித்தேன்.

6-2-1898 இன்றிரவு தொல்காப்பியம் புறத்திணையியல் மனப்பாடம் செய்து முடித்தேன்.

7-2-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர் என்னைக் காண வந்தார். அவருடன் கடற்கரை சென்றேன்.

12-2-1898 கலெக்டருக்கு மனு எழுதுவதற்காக எளியனான என்னைக் காண வீரப்ப செட்டியார் வந்தார்.

16-2-1898 மேலாளர் தாமசைக் காண வெசுலியன் மிஷன் கல்லூரி எழுத்தர் என்னை அழைத்துச் சென்றார். என்னைத் தமிழ்பண்டிதராகப் பொறுப்பேற்க வேண்டினார்; இணங்கி

னேன்.

17-2-1898

வெசுலியன் மிஷன் கல்லூரிக்குச் சென்று

திரு. சுமித்துக்கு இலக்கணம் கற்பித்தேன்...

21-2-1898 திரு. சுமித்துக்குத் தமிழ் பயிற்றுவித்தேன்.

23-2-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் சிலப்பதிகாரப் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் திரு. மருதையா பிள்ளையவர்களும் மகாதேவப் பிள்ளை யவர்களும் என்னைக் காண வந்தனர்.

25-2-1898 மார்ச்சு 4ஆம் நாளன்று கிறித்தவக் கல்லூரித் துணைத் தமிழ்ப் பண்டிதர் பொறுப்பை ஏற்பேன் என்று அரங்கைய செட்டியாரவர்களுக்கு மடல் விடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/212&oldid=1592553" இலிருந்து மீள்விக்கப்பட்டது