உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

-30

மறைமலையம் - 30

15-1-1898 திரு. வி.கோ. சூரியநாராயண சூரியநாராயண சாஸ்திரி பி.ஏ.அவர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களுக்கும் இன்று மாலை அஞ்சலட்டை விடுத்தேன்.

16-1-1898 என் புரவலர் திரு. பெ. சுந்தரம்பிள்ளை யவர்கள் எழுதிய ‘திருஞானசம்பந்தர் காலம்' முதல் ஐந்து பக்கம் படித்தேன். எளியேன் என்னைக் காண வீரப்ப செட்டியா ரவர்கள் இன்று மாலை வந்தார்.

25-1-1898 திருவாவடுதுறை மடத்துக்குச் செல்லுமாறு ஆணையிட்டு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் எழுதிய மடல் வந்தது

26-1-1898 திருவாடுதுறை தம்பிரான் அவர்களைப் பற்றிய செய்யுள் ஒன்றை இன்று காலை இயற்றினேன்.... மாலையில் வீரப்ப செட்டியாரவர்களைக் காணச் சென்றேன். அவர் என்னைச் சுப்பராய முதலியாரிடம் அழைத்துச் சென்று திருவாவடுதுறை தம்பிரான் அவர்கட்கு ஒரு மடல் பெற்றுத்

தந்தார்.

27-1-1898 இன்று காலை 10 மணியளவில் திருவாவடுதுறை நோக்கிச் சென்றேன். பொன்னம்பலம் செட்டியாரவர்கள் அனைத்து வசதிகளையும் செய்தார்.

28-1-1898 பண்டார சந்நிதியவர்களைக் காண பொன்னம் பலம் செட்டியாரவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. கடந்த திங்கட் கிழமையன்று என் மனைவி ஈன்றெடுத்த மகவு இன்றிரவு இறந்தது.

29-1-1898 7.00 மணியளவில் பண்டார சந்நிதியவர்களைக் கண்டோம். எந்தத் துறையில் எனக்குப் புலமை உண்டு என அவர்கள் வினவினர். தமிழில் மட்டுமே எனக்குப் புலமை உண்டென விடையிறுத்து, நான் கற்ற தமிழ் நூல்களை எடுத்துரைத்தேன்....

30-1-1898 பண்டார சந்நிதியவர்கள்

எனக்குச் சால்வை போர்த்தினார்...

ன்று மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/211&oldid=1592552" இலிருந்து மீள்விக்கப்பட்டது