உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1898

3-1-1898 'முதற்குறள்வாத நிராகரணம்’ ஏறத்தாழ 20 பக்கம் எழுதினேன்.

4-1-1898 ‘அறுவகைமரபிற் பார்ப்பனப் பக்கம்' என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தை மனப்பாடம் செய்தேன்.

5-1-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரிடமிருந்து அஞ்ச லட்டை வந்தது ... சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன்.

6-1-1898 ‘முதற்குறள்வாத நிராகரணம்’, இன்று எழுதி முடித்தேன்; அதனையும் ‘முதற்குறள்வாத' த்தையும், 'சூ தனிய வாதி மறுப்பு' என்னும் துண்டறிக்கைகையும் பரங்கிமலைச் செயல்பாட்டுப் பொறியாளர் அலுவலகத்தில் எழுத்தராயிருக் கும் திரு. மகாதேவப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன். சித்தியாரின் ஏழாம் சூத்திரத்தை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன்.

7-1-1898... பகவத் கீதையைத் தமிழ்ப்பாடல் வடிவில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன் : இன்று மூன்று பாடல் எழுதினேன் ...

8-1-1898 சென்னை அரசாங்க மொழிபெயர்ப்பாளர் தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்களுக்கு அஞ்சலட்டை விடுத்தேன்.

12-1-1898 பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடி

னேன்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/210&oldid=1592551" இலிருந்து மீள்விக்கப்பட்டது