உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

-

மறைமலையம் – 30

5-8-1898 கும்பகோணம் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் திரு. உ.வே. சாமிநாத ஐயரவர்களுக்கு மடல் விடுத்தேன்.

8-8-1898 பிரும்மஸ்ரீ சாமிநாத ஐயரிடமிருந்து கடிதம் வந்தது. 'மணிமேகலை’ப் படியை நான் பெற்றுக் கொள்ளற் பொருட்டு அதனுடன் திரு. முருகேச முதலியார்க்குச் சிறு கடிதம் இருந்தது. அவ்வாறே அவரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்டேன்.

10-8-1898 குறுந்தொகை முழுமையும் படியெடுத்து விட்டு ஓலைச்சுவடியைச் சூரியநாராயண சாஸ்திரியவர்களுக்குத் திருப்பித் தந்தேன்.

27-8-1898 விருதுப்பட்டி சிவஞானயோகிகளின் நூலுக்குப் பன்னிரண்டு பாக்கள் சிறப்புப் பாயிரம் எழுதினேன். என் குரு ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் பெயரில் சிறப்புப் பாயிரமாக ஆசிரியப்பா ஒன்றை அதே நூலுக்கென எழுதினேன்.

16-9-1898 பிரும்மஸ்ரீ சாமிநாத ஐயரவர்களிடமிருந்து LOL ல் வந்தது. சூரியநாராயண சாஸ்திரியவர்களிடமிருந்து மணி மேகலைப் படியைப் பெற்றுத் தண்டலம் பாலசுந்தர முதலி யாருக்குத் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

18-9-1898 இன்று காலை மாவட்ட முன்சீப் நல்லசாமிப் பிள்ளை வந்தார். அவர் என்னைக் காண விழைவதாக பாலசுந்தர முதலியாரவர்கள் சொன்னார்.

3-10-1898 கடந்த வார ‘நீலலோசனி' இதழ் வந்தது. இன்று மாலை சம்பளம் பெற்றேன். 'கிறித்துவக் கல்லூரி' இதழுக்குரிய கையொப்பமாக ரூ.2/- மறைத்திரு கின்னரிடம் (Skinner) காடுத்தேன். மிச்சத் தொகை ரூ 1-8-0 அடுத்த திங்கள் தருவதாகச் சொன்னேன்.

19-10-1898 ‘சித்தாந்த ஞானபோதம்' இதழுக்கென ‘நித்திலமணி’, ‘மாயாவாதி மதக்குழப்பம்' என்ற என் கட்டுரை களைத் திரு. நாராயணசாமி நாயகர் பெற்றுச் சென்றார்.

27-10-1898 இந்த மாத ‘ஞானபோதினி' வந்தது. சித்தாந்த தீபிகையில் வெளியான சித்தியாரின் தருக்கப் பகுதிக்குரிய என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/215&oldid=1592557" இலிருந்து மீள்விக்கப்பட்டது