உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

183

உரையைக் கண்டித்து இராமநாதபுரம் சாமிநாத பிள்ளை எழுதியிருந்தார்.

ல்

20-10-1898 ‘திராவிட கலா போதினி சங்க’த்தில் ‘இல் வாழ்க்கை' எனும் பொருள் பற்றி நடந்த கூட்டத்திற்குத் தலைமை ஏற்றேன்.

6

17-11-1898 ‘கலிங்கத்துப் பரணி' படியைச் சூரிய நாராயண சாஸ்திரியவர்கள் கொடுத்தனர்.

25-11-1898 'சித்தாந்த தீபிகை புத்துரை விளக்கம்,’ 'வேற்றுமை மயக்கம்' என்ற என் கட்டுரைகள் வெளிவந்த ஞானபோதினி'யைச் சூரிய நாராயண சாஸ்திரியவர்கள்

கொடுத்தார்,

5-12-1898 ‘மக்லீன் கையேட்'டைப் படிப்பதற்கென அரசாங்கத் தமிழ்மொழி பெயர்ப்பாளர் அலுவலகம் சென் றேன்.*

6-12-1898 இன்று கல்லூரிக்குச் சென்று கால்டுவெல்லின் ‘திராவிட மொழி ஒப்பிலக்கணம்' படித்தேன்.

8-12-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் என்னைக் காண வந்தனர். 'சித்தாந்த ஞானபோதத்’துக்கென தலையங் கமும், தாயுமானவரின் முதல் பாட்டுக்கு உரையும் எழுதிக் கொடுத்தேன்.

1899

6-1-1899 இன்று பிற்பகல் தெலுங்கு எழுத்து எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளும் நல் வாய்ப்புக் கிட்டியது.எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினேன்.

7-1-1899 இந்துஸ்தானி முன்ஷியுடன் முன்ஷியுடன் நெடுநேரம் உரையாடினேன். குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துகளை அவர் வாயிலாக அறிந்து கொண்டேன்.

13-1-1899 கி.பி. 986 இல் வைணவப் பெரியார் இராமநுச் ஆசாரியார் பிறந்தார். பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/216&oldid=1592560" இலிருந்து மீள்விக்கப்பட்டது