உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

-

மறைமலையம் 30

22-1-1899 மில்டனைப் பற்றிய மெக்காலேயின் கட்டுரை யைப் படித்தேன்.

12-2-1899 ஜே.எம். நல்லசாமி பிள்ளையவர்களின் நாகரத்தினம் பிள்ளையவர்களுடன்

சகோதரர் உரையாடினேன்.

13-2-1899 என்னிடம் பாடம் கேட்பதற்கென இன்று முதல் நாகரத்தினம் பிள்ளையவர்கள் வரத் தொடங்கினார்.

14-2-1899 வேதாரணியப் புராணத்துக்குப் பாடல் வடிவில் முன்னுரை எழுதி, நாளை சூளைக்கு வந்து சந்திக்குமாறு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் கூறினர்.

18-2-1899 (அரசாங்க) தமிழ் மொழிபெயர்ப்பாளர் பொறுப்பு திரு. அரங்காச்சாரியவர்களுக்கு அளிக்கப்பட்ட தென்று அறிந்தேன்.

19-2-1899 திரு

அனவரதவிநாயகம்

பிள்ளை

(சேக்ஸ்பியரின்) Tempest with notes எனும் நூலைக் கொடுத்தார். பிரதாப முதலியார் சரித்திரத்தை அவர்க்குப் படிக்கக் கொடுத்தேன்.

10-3-1899 திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி. கல்லூரியில் வேலை வாய்ப்பு உள்ளதென அறிந்து விண்ணப்பம் விடுத்தேன்.

16-3-1899 எனது தமிழ் நாவலின் முதல் அத்தியாயத்தைப் படியெடுத்தேன். அதை வெளியிடுவதற்குரிய இதழ் வெளிவந்து விட்டதால் பயனில்லாமல் போயிற்று.

19-3-1899 ‘இருசமய விளக்கத் தெளிவி'ன் திருத்தப்படியை எழுதினேன். ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களுக்குப் படித்துக் காட்டியதும் அவர்கள் விளக்கவுரை அளித்தனர்.

23-3-1899 இன்று திரு.

கோபாலாசாரியார்

வரவில்லையாத லால் ஆறு வகுப்பு எடுத்தேன்.

30-3-1899 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் வண்டிக்காரன் அருத்தாபத்திப் பிரமாணத்'தின் மெய்ப்புப் படிகளைக் கொணர்ந்தான். நான் திருத்திக் கொடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/217&oldid=1592561" இலிருந்து மீள்விக்கப்பட்டது