உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

185

3-4-1899 என் தமிழ் நாவலை அச்சிடுவதுபற்றி என் தமிழ்ப் புரவலர் த. பாலசுந்தர முதலியாரவர்களுடன் பேசினேன்; மெய்ப்புப்படிகளைத் திருத்தித் தருவதாக ஒப்புக் கொண்டார்.

23-4-1899 திரு. ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்.

6-5-1899 ‘Some Sovereigns of Travancore' எனும் நூலை அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் பெற்றுச் சென்றார்.

3-6-1899 தாம்சன் அண்டு கம்பெனிக்குச் சென்று 11 அணாவுக்கு ஜியார்ஜ் ரேனால்டு எழுதிய இரண்டு நாவல்கள் வாங்கினேன். பின்னர், பூரணலிங்கம் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்.

ன்

29-6-1899 பூரணலிங்கம் பிள்ளையவர்கள் அனுப்பி வைத்த ‘நித்திலமணி என்னுடம் நாடகக் காப்பியக் கதைச் சுருக்கத்’தின் மெய்ப்புப் படிகளைத் திருத்தினேன்.

3-7-1899 ஆக்சுபோர்டில் உள்ள மறை மறை டாக்டர் ஜி.யு.போப் விடுத்த மடல் கிடைக்கப் பெற்றேன்.

9-7-1899 மறை. ஜி.யு. போப் அவர்கட்குக் கடிதம் எழுதி விடுத்தேன்.

18-8-1899 கல்லூரியின் 'திராவிட பாஷா சங்க'த்தில் தலைமையேற்றேன்.

31-8-1899 திருச்சி புனித சூசைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வேலை வாய்ப்பு உள்ளதென்று சீனிவாசா சாரியார் தெரிவித்தார்.

2-9-1899 புனித சூசைக் கல்லூரி முதல்வர்க்கு விண்ணப்பம் டுத்தேன்.

29-9-1899 கோமளீசுரன்பேட்டை கலியாணசுந்தர முதலியாரவர்களுக்குக் கடிதம் விடுத்தேன்.

27-10-1899 கிறித்துவக் கல்லூரியின் 'திராவிட இலக்கியச் சங்கத்’தில் என் தலைமையில் அனவரதவிநாயகம் பிள்ளை யவர்கள் பெரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியரைப் பற்றிய தமது ஆய்வின் சுருக்கத்தைப் படித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/218&oldid=1592562" இலிருந்து மீள்விக்கப்பட்டது