உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

-30

மறைமலையம் - 30

3-11-1899 நானும் அனவரதவிநாயகம் பிள்ளையவர்களும் சென்று அருணாசலக் கவிராயரைக் கண்டோம்.

4-12-1899 தண்டலம் பாலசுந்தர முதலியாரவர்களைக்

காணச் சென்றேன். நான் நான் படிப்பதற்கென 'திராவிட பிரகாசிகை' யைக் கொடுத்தார்.

24-12-1899 நல்லசாமிப் பிள்ளையவர்கள் சென்னை வந்ததும் என்னைக் காண விரும்பினார். அவ்வாறே அவரை க் காணச் சென்றேன்.

1900

2-1-1900 அசலாம்பிகை அம்மாள் என்னும் பெண்பாற் புலவரை இன்று பிற்பகல் அனவரதவிநாயகம் பிள்ளையவர் களுடன் காணச் சென்றேன்.

8-1-1900 பிற்பகல் அசலாம்பிகை அம்மாளைக் காணச் சென்றேன்.

21-1-1900 திரு. இராசாராமுக்கு இரவல் கொடுத்துள்ள நூல்களாவன: நைடதம், பரமபதபங்க வினாவிடை. திரு, வேங்கடகண்ணன் பெற்றுக் சென்ற நூல்கள்: திருவிளையாடல் வசனம், கலாவதி, ரூபாவதி.

.

31-1-1900 ‘முனிமொழி'யைப் பற்றி திரு. சபாபதி நாவலர் எழுதியவற்றை மறுத்து நான் எழுதிய 'முனிமொழிப் பிரகா சிகை' எனும் துண்டறிக்கையைச் சூரியநாராயண சாஸ்திரி யவர்கள் பாராட்டினர்.

2-2-1900 எனது ‘திருவொற்றியூர் மும்மணிக் கோவை'யின் பதினாறாவது அகவலைச் சிறிது எழுதினேன்.

.

7-2-1900 பேராசிரியர் லாடின் (Lodd) பொழிவுகளைக் கேட்க சீட்டும் அறிக்கையும் திரு. கின்னர் கொடுத்தார். இன்று விடியற்காலை 3:11 முதல் 3:14 வரை சிறு நில அதிர்வு ஏற்பட்டது.

8-2-1900 பேராசிரியர் லாடின் உரையைக் கேட்டேன்;

சாரமற்று இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/219&oldid=1592563" இலிருந்து மீள்விக்கப்பட்டது