உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

187

11-2-1900 ஞானபோதினிக்கென ‘நக்கீரனார் தெய்வப் புலமைமாட்சி’ கட்டுரை எழுதினேன்.

18-2-1900 பிற்பகல் பாலசுந்தர முதலியாரவர்கள் கடிதம் கொடுத்தார்; அதனை மறை. லாசரஸ் பாதிரியாரிடம் எடுத்துச் சென்றேன். குறளிலும் இராமாயணத்திலும் கேள்வி கேட்டார். அவற்றுக்குத் தக்க விடை அளித்ததால் எஸ். பி.ஜி. கல்லூரி முதல்வர்க்கு என்னை வலுவாகப் பரிந்துரைத்தார்.

L

19-2-1900 பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களும் த. பாலசுந்தர முதலியாரவர்களும் அளித்த சான்றிதழ் களையும், லாசரஸ் பாதிரியார் கொடுத்த கடிதத்தையும் ணைத்து எஸ்.பி.ஜி. கல்லூரி முதல்வர்க்கு விண்ணப்பம் விடுத்தேன். சூரியநாராயண சாஸ்திரியவர்கள் தமது வேம்பத்தூரார் திருவிளையாடல்' கைப்படியை எனக்குக் காடுத்தார்.

21-2-1900 தமது கல்லூரியில் காலி இட டம் ம் இல்லை யென்றும், இருப்பினும் என் விண்ணப்பத்தைப் பதிந்து விட் தாகவும் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி. கல்லூரியிலிருந்து எர்பர்டு சுமித் கடிதம் எழுதியிருந்தார்.

25-2-1900 திரு. சீனிவாசகம் பிள்ளையும் திரு. வேங்கட கண்ணனும் என்னைக் காண வந்தனர். நெடுநேரம் உரை யாடினேன். பிரித்தானிய அரசையும் அதன் அரசியையும் வாழ்த்தி திரு. அனந்தராம பாகவதர் நடத்தவிருக்கும் கச்சேரிக்கு என்னைப் பாடல் எழுத வேண்டினர்.

26-2-1900 அவ்வாறே பாடல்கள் இயற்றினேன்.

3-3-1900 மாக்சு மூலரின் இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன்.

12-3-1900 விடியற்காலை த. பாலசுந்தர முதலியார வர்களைச் காணச் சென்றேன். நக்கீரரைப் பற்றிக் கட்டுரை அனுப்ப வேண்டி கனகசபை பிள்ளைக்குக் கடிதம் எழுதுமாறு அவரைக் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/220&oldid=1592565" இலிருந்து மீள்விக்கப்பட்டது