உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

-30

மறைமலையம் - 30

16-4-1900 அருங்காட்சியகம் சென்றேன். ஆனால் ‘மதராஸ் ரிவியு' கிடைக்கவில்லை. எனவே காட்சியகத்தைச் சுற்றி அங்குள்ள பொருள்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

18-4-1900 இன்று விடியற்காலை ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களைக் கண்டு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கட்கு ஓர் அறிமுகக் கடிதம் பெற்று, அவரைக் கண்டேன். அன்புடன் பேசினார். அகநானூற்றுப் பணிக்கு என் உதவியை அளிக்க முன் வந்தேன்.

சென்னைக்

20-4-1900 பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் பத்துப் பாட்டைப் பற்றிய கட்டுரையைச் கிறித்துவக் கல்லூரி மலரிலிருந்து படித்தேன்.

22-4-1900 சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கட்கு அஞ்சலட்டை விடுத்தேன்.

23-4-1900 மாக்சு மூலரின் 'India: what it can teach us’ எனும் நூலைச் சூரிய நாராயண சாஸ்திரியவர்கள் ரூ.2-3-0 லைக்கு எனக்கென வாங்கி வந்தார்.

17-5-1900 எழுத்தரிடம் சென்று ரூ.28-10-0 சம்பளம் பெற்றேன். இத் திங்கள் தொடங்கி எனக்குச் சம்பளம் ரூ.30/-

3-7-1900 எனது 'திருவொற்றியூர் மும்மணிக்கோவையின்’ ருபத்தெட்டாவது செய்யுளின் ஒரு பகுதி எழுதினேன்.

6-7-1900 சென்டிரல் புத்தகக் கடைக்குச் சென்று மாக்சு மூலரின் ‘Three Lectures on the Science of Language' எனும் நூலைப் பெற்றுத் தருமாறு அதன் மேலாளரிடம் வேண்டினேன்.

26-8-1900 முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் திருவிடைமருதூர்க் கலம்பகம்' பற்றி இன்று மாலை உரையாற்றினேன்.

30-8-1900 பேராசிரியர் மாக்சு மூலரின் ‘Comparative Phi- lology' படித்தேன்.

2-9-1900 ‘Introduction to the Science of Language' இரு தொகுதிகளை அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் படிக்கக் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/221&oldid=1592566" இலிருந்து மீள்விக்கப்பட்டது