உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

189

8-9-1900 இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பற்றிய திரு. செல்வ ராசாவின் அருமையான பொழிவு கேட்டேன்.

5-10-1900 சூரியநாராயண சாஸ்திரியவர்களின் ‘நாடக

இயல்' சூத்திரங்களைத் திருத்தினேன்.

17-10-1900 பேரா. மாக்சு மூலருக்கு நான் எழுதிய கடிதத்தை அஞ்சலில் விடுத்தேன்.

19-10-1900 மாலையில் பச்சையப்பன் (கல்லூரிக்குச்) சென்று செல்வகேசவராய முதலியாரவர்களைக் கண்டேன்; திராவிடப் பிரகாசிகையைத் திருப்பித் தருமாறு வேண்டினேன்.

30-10-1900 நேற்று பேரா. மாக்சு மூலர் மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டு வருத்தமும் வியப்பும் அடைந்தேன். 2-11-1900 ஜியார்ஜ் டபிள்யூ எம். ரேனால்டுசின் ‘Necro- mancer' நூலைத் எனக்குப் பரிசளித்தார்.

திரு

வேங்கடகண்ணன்

6

5-11-1900 எனது ‘மும்மணிக் கோவை'யின் மெய்ப்புப் படிகளை சி.என். அச்சகம் சென்று படித்தேன்.

17-11-1900 ஜி.யு.போப் அவர்களின் திருவாசக மொழிப் பெயர்ப்பைக் கண்டேன்.

3-12-1900 "வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை'யைத் தொடங்குவதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன்.

1901

7-1-1901 ‘மும்மணிக் கோவை’யில் சேர்ப்பதற்கென ஆங்கிலத்தில் ஒரு பாடல் (Sonnet) புனைந்தேன்.

21-1-1901 நம் தாய்நாட்டின் மேதகு இறை விக்டோரியா அரசி இறந்து விட்டார் என்ற துயரச் செய்தியை இதழ்களிலிருந்து அறிந்தேன்.

27-1-1901 தமிழில் ஓர் இரங்கற்பா எழுதி அதனை ஆங்கிலத்திலும் பெயர்த்து என்னை அனுப்புமாறு திரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/222&oldid=1592567" இலிருந்து மீள்விக்கப்பட்டது