உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் - 30

நல்லசாமிப் பிள்ளையவர்கள் பாலசுந்தர முதலியார்க்கு மடல் விடுத்திருந்தார்.

6-2-1901 (அலெக்சாண்டர்) போப், கார்லைல் கியோரைப் பற்றிய நூல்களை வாங்கினேன்.

18-2-1901 கும்பகோணம் தமிழ்ப் பண்டிதர் சாமிநாத ஐயர்க்கு 'மும்மணிக் கோவை'யை நூலஞ்சலில் விடுத்தேன்; அஞ்சலட்டையும் விடுத்தேன்.

22-2-1901 (ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர) நாயகர் மறைந்தார்.

23-2-1901 என் மனைவியுடன் சூளை சென்றேன்... உடல் எடுக்கப்படும் முன்னர், அழுது கொண்டே ஓர் உரையாற்றி னேன்.

25-2-1901 சாமிநாம ஐயரிடமிருந்து மடல் வரப்பெற்றேன். 27-2-1901 சிங்காரவேலு முதலியாரவர்களிடமிருந்து மடல் வரப் பெற்றேன்; உடனே பதில் விடுத்தேன்.

6-3-1901 மறைந்த ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைப் பற்றிப் பாடல்கள் புனைந்து கொண்டிருந்தேன்.

7-3-1901 நல்லசாமிப் பிள்ளையவர்கள் சில வரிகளை எழுதியனுப்பி அவற்றைப் பாடலாக்கித் தருமாறு மடல் விடுத்தார். உடனே அவற்றைப் பாடலாக்கி விடுத்தேன்.

10-3-1901 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் காரியத்துக்குக் குடும்பத்துடன் சென்றேன். ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தனர். அவர்தம் பெருமை உரைத்துக் கற்றோர் பலர் சய்யுள் பாடினர். இறுதியில் என் பாடல்களைப் பாடிக் காட்டினேன். நாயகரவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது குறித்துச் சிற்றுரையாற்றினேன்.

12-3-1901 தம்மால் சென்னைக்கு வர இயலவில்லை என்று அறிவித்த சிங்காரவேலு முதலியாரவர்களின் தொலைவரி ஞாயிறன்று கிடைத்தது.

14-3-1901 (சோமசுந்தரக்) காஞ்சியின் 2 படிகளைக் கும்ப கோணம் கல்லூரி சாமிநாத ஐயரவர்களுக்கு அனுப்பினேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/223&oldid=1592568" இலிருந்து மீள்விக்கப்பட்டது