உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

191

மறைந்த ஸ்ரீலஸ்ரீநாயகரவர்களைப் பற்றி மேலும் சில பாடலை அனுப்புமாறு கேட்டேன்.

.

18-3-1901 எங்கள் கல்லூரியின் திராவிட மொழிச் சங்கக் கூட்டத்தில் தலைமையேற்று, 'தமிழின் தனித்தியங்கும் தன்மை’ (The Independence of the Tamil Language) எனும் பொருள் பற்றி உரையாற்றினேன்.

20-3-1901 The Light of Asia நூலை வாங்கினேன்.

25-3-1901 ‘உபநிடதங்கள்' வாடகை நூலகத்திலிருந்து

பெற்றேன்.

15-4-1901 தொண்டை மண்டல (பள்ளியில்) சிறு கூட்டம் நடத்தினோம். மறைந்த ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் நினைவு நிதியத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது.

19-4-1901 Sir Monier Williams Religious Thought and Life in India' நூலை நூலகத்திலிருந்து எடுத்தேன்.

27-4-1901 Native Students Union ஆதரவில் நடந்த கூட்டத்தில் முதற் குறளின் அடிப்படையில் கடவுளைப் பற்றி உரையாற்றினேன்.

29-4-1901 எனது 'சோமசுந்தரக் காஞ்சிக்கு' Tamil Repre- sentative' இல் யாரோ மறுப்பு எழுதியிருப்பதாக அறிந்தேன்.

9-5-1901... “சோமசுந்தரக் காஞ்சியாபாச’த்துக்கு ஒரு மறுப்புரை எழுதி, வெளியிடுவதற்கென சூரிய நாராயண சாஸ்திரியவர்களிடம் கொடுத்தேன்.

15-5-1901... பேரா. மாக்சு மூலரின் ‘Six Systems of Hindu Philosophy' வாங்கினேன்.

25-5-1901...

எனது ‘சோமசுந்தரக் காஞ்சியாக்கம்' வெளிவந்த Tamil Representative இதழ் கிடைத்தது.

3-7-1901... லார்டு டெனிசனின் கவிதைகள், மில்ட்டனைப் பற்றிய அடிசனின் திறனாய்வுக் கட்டுரைகள், எட்மண்டு ஸ்பென்சரின் கவிதைகள், கதே பற்றிக் கார்லைலின் கட்டுரை ஆகியவற்றை வாங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/224&oldid=1592569" இலிருந்து மீள்விக்கப்பட்டது