உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

-

மறைமலையம் - 30

8-7-1901... இன்று முதல் என் மகளைச் சர்ச் மிசன் பெண்கள் பள்ளிக்கு அனுப்பினேன்.

11-7-1901... பர்க்கு வின் ‘The Sublime and Beautiful’

வாங்கினேன்.

29-7-1901...

கிரேயின் Ode on Eaton college மொழி பெயர்ப்பை 'ஞானபோதினி'யில் வெளியிடுவதற்கென சூரிய நாராயண சாஸ்திரியவர்களிடம் கொடுத்தேன்.

25-8-1901 ‘சோமசுந்தரக் காஞ்சியாக்கத்’தை மறுமுறை

எழுதத் தொடங்கினேன்.

15-10-1901 ‘சிவ பஸ்ப வைபவம்’ 10 படிகள் தூத்துக்குடி சிவஞான பிரகாச சபைக்கு அனுப்பினேன்.

5-11-1901... பாபு விபின் சந்திர பாலரின் ‘இராம் மோகன் இராயை’ப் பற்றிய பொழிவுக் கூட்டத்துக்குச் சென்றேன்.

13-11-1901... பண்டித சவரிராயப் பிள்ளையவர்களிட மிருந்து மடல் பெற்றேன்...

18-11-1901 ... நெல்லையப்ப கவிராயரவர்கட்கு நூலஞ்சலில் சில நூல்கள் விடுத்தேன்...

27-11-1901... ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்களிடமிருந்து மடல் வரப் பெற்றேன்....

...

3-12-1901. ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்கள் எழுதிய நூல்களனைத்தையும் அஞ்சலில் வரப்பெற்றேன்.

12-12-1901... ‘தமிழின் தோற்ற’த்தைக் குறித்தொரு கட்டுரை வரைந்தேன்.

17-12-1901... தமிழ்ச் சொற்களின் தோற்றம் பற்றிக் கட்டுரை எழுதினேன்.

22-12-1901...விவேகானந்தரின், பக்தியோகம், கருமயோகம், ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/225&oldid=1592570" இலிருந்து மீள்விக்கப்பட்டது