உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1902

193

2-1-1902... இன்று காலை சி.என். அச்சகம் சென்று ஞானசாகரம்' இதழுக்கான அறிக்கை அச்சிடக் கொடுத்தேன்.

6-1-1902... மயிலாப்பூர் சென்று சபாபதி நாவலரவர்களைக் கண்டேன். தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் எனக்கிருக்கும் நுண்ணிய புலமையை வியந்தார்.

8-1-1902... திரு. இரத்தினவேலு முதலியாருடன் காவல் துறை ஆணையாளர் அலுவலகம் சென்று ஞானசாகர’ இதழுக்கு ஆசிரியன் என்று அறிவித்தேன்...

31-1-1902 (i) பாண்டித்துரைத் தேவர் (ii) ஜே.எம். நல்ல சாமிப்பிள்ளை... ஆகியோர்க்கு மடல்களும் இதழ்களும் அனுப்பப்பட்டன.

13-2-1902... இன்று பிற்பகல் 2:00 மணிக்கு என் மனைவி பெண் மகவு ஈன்றாள்.

10-3-1902... ஆர்பத்நாட் கம்பெனிக்குச் சென்று ரூ.800 வைப்பில் சேர்த்தேன்.

16-3-1902... நானும் திரு. மோகன் முதலியாரும் சேர்ந்து என் நூலகத்திலுள்ள நாயகரவர்களின் நூல்கள், துண்டறிக்கைகள் ஆகியவற்றின் பட்டியல் அணியம் செய்தோம்.

18-3-1902... நூலகத்திலிருந்து Muir's Sanscrit Texts vol. I எடுத்து வந்தேன்.

3-5-1902 யாழ்ப்பாணம் ஸ்ரீமத் கனகசபாபதி அய்யர்க்கு மடல் விடுத்தேன்...

18-9-1902 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் ஓரே மகன் சிவபாதம் இன்று மாலை 4:00 மணிக்கு உயிர் நீத்தார்.

26-9-1902... 7, இருளப்பன் தெரு, பிளாக் டவுன் புது வீட்டுக்கு மாறினோம்.

10-12-1902...7, இருளப்பன் தெரு வீட்டிலிருந்து, முத்தி யாலுப்பேட்டை, 197 இலிங்கிச் செட்டி தெரு வீட்டுக்கு மாறினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/226&oldid=1592572" இலிருந்து மீள்விக்கப்பட்டது