உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

❖ மறைமலையம் - 30

26-12-1902 ‘திராவிடத் தமிழர் தொல்பொருள் ஆய்வுச் சங்கத்'துக்கு நான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றேன்.

1903

3-1-1903 'தமிழ்க் கழக'த்துக்குரிய விதிமுறைகள் வகுக்கப்பெற்றன.

11-1-1903 கந்தசாமிக் கவிராயரிடமிருந்து கடிதம் வந்தது. 16-1-1903 .... மதுரையிலிருந்து ‘செந்தமிழ்’ வந்தது.

22-1-1993 பேரா. சூலியன் வின்சனுக்கு மடல் விடுத்தேன்.

2-2-1903... சிவனடியார் திருக்கூட்டத்தின் செயலாளர் என்னைச் சைவப்பிரசாரகராக இருக்குமாறு வேண்டினார்; இணங்கினேன்.

26-2-1903 டப்ளின் (Dublin) பல்கலைக்கழகத்தின் செயலாளர்க்கு மடல் விடுத்தேன்.

27-2-1903 ‘மதராஸ் மெயில்' நாளேட்டுக்கு ஒரு கட்டுரை விடுத்தேன்...

7-3-1903 பரிமேலழகரைப் பற்றிக் கட்டுரை வரைந்தேன் 9-3-1903 இலண்டன் மெட்ரிகுலேசன் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினேன்.

18-3-1903.... ரூ. 11க்கு Dutts Civilization of India நூல்

வாங்கினேன்.

6-6-1903 குலாம் காதிறு நாவலரவர்களும் பிச்சை இப்ராகிம் புலவரவர்களும் என்னைக் காண வந்தனர்.

14-6-1903 ‘புறச்சமயத்தவர்க்கிருளாய்' முதல் இரண்டடி களைப் பற்றி அருமையான உரையாற்றினேன்....

24-6-1903 திருவடிக்குச் சென்று ‘சைவசமயமே சமயம்’

என்று உரையாற்றினேன்.

29-6-1903 எனது சொற்பொழிவைப் பற்றி ‘ஸ்டாண்டர்டு' 'இந்து' ஆகிய இதழ்களுக்குச் செய்தி விடுத்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/227&oldid=1592573" இலிருந்து மீள்விக்கப்பட்டது