உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

கட்டுரைகளிலிருந்து சில

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 13-7-1903 என் னு டை ய பகுதிகளை எடுத்துத் தம் கட்டுரைகளில் கையாண்டதை ஒப்புக்கொள்ளு மாறு வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியவர் களுக்குப் பதிவஞ் சலில் மடல் விடுத்தேன்

22-7-1903... என் உயிரைக் காப்பீடு செய்துகொண்டேன்; என் அகவை 27; உயரம் 5 அடி 6 அங்குலம்; முதுகில் ஒரு மச்சம்; என் பெயர் இராமசாமி சொக்கநாத வேதாசலம் பிள்ளை.... 24-7-1903.... பெரும்புலவர் ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்கள் இறந்தார் என்று அறிந்தேன்.

டம்

1-8-1903.... யாழ்ப்பாணம் நா. கதிரைவேலுப் பிள்ளை என்னைக் காண வந்தார்; எம் கல்லூரியில் அவர்க்கு இ தேடித் தருமாறு வேண்டினார். அவரை அன்புடன் வரவேற் றேன். அவர்மீது எவ்வகையான வெறுப்பும் எனக்கில்லை என்றுரைத்தேன். என்னால் இயன்றதைச் செய்வேன் என்று உறுதியளித்தேன்.

15-8-1903 மாணிக்கவாசகர் காலத்தைத் திரு. பீட்டர்

எனக்காக ஆங்கிலத்தில் பெயர்த்தளித்தார்...

31-8-1903 திரு. வி.எம். சடகோபராமாநுசாசாரியாரின் சொற்பொழிவு கேட்டேன்; அதிலிருந்த பொருந்தாத கருத்து களை மறுத்தேன்.

1-9-1903 ‘சுதேசமித்திரன்' ஆசிரியர்க்கு ஒரு கட்டுரை அனுப்பினேன்.

3-9-1903 சில பகுதிகள் நீக்கப்பட்டு என் கட்டுரை சுதேசமித்திரனி' ல் வெளிவந்தமை கண்டு மனநிறைவெய்தி

னேன்.

12-9-1903... முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையின் முதற் படிவ மெய்ப்புத் திருத்திக் கொடுத்தேன்.

20-9-1903

அப்பாவு

செட்டியாரவர்களுடனும்

பிறருடனும் சிந்தாதிரிப்பேட்டை கூட்டத்துக்குச் சென்றேன்; அருட்பாவைப் பற்றிய வழக்கமான விவாதம் நடைபெற வில்லை; கதிரைவேலுப் பிள்ளை மட்டுமே ஏதேதோ குற்றஞ் சொல்லிக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/228&oldid=1592575" இலிருந்து மீள்விக்கப்பட்டது